தூக்கமது கண்விடேல் – 002
ஒரு சரியான உணவு தயாரிக்கப்பட்டால், அதற்க்கென்று ஒரு Secret Sauce இருக்கும். அதே போல .. ஒவ்வொரு மனிதனுக்குமான Secret Sauce தான்அவனின் அவளின் தூக்கம். இந்த Secret Sauce தான் மனித வெற்றியை தீர்மானிக்கிறது.
சரி .. ஒழுங்காக தூங்கவில்லை எனில் அப்படி என்ன தான் நடந்துவிடும் ?
* நோய் எதிர்ப்பு அமைப்பு தன் செயல்களை இழக்கும். ஆக .. நோய்கள் உடலுக்கு உள்ளே வருவது எளிதாகும். ” நல்லா தான் இருந்தேன். என்னவோ தெரியவில்லை …ஒவ்வொரு பிரச்சினையா வருது .. ” ன்னு சொல்கிறவரா நீங்கள் ?. உங்களின் தூக்க நேரத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது !
* சர்க்கரை வியாதி – மிகவும் ஆச்சர்யமான விஷயம் இது. தூக்க த்திற்கும் சர்க்கரைக்குமான தொடர்பு இதுவரை கவனிக்கப்பட்டதாய் தெரியவில்லை. தூக்கம் – சக்கரை – புற்றுநோய் ..மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இங்கே இரண்டு முக்கியமானவைகளை கவனிக்க வேண்டும்.
01. 08 மணி நேர தூக்கம் இழக்க கூடாது.
02. அனுமதிக்கப்பட்ட அளவிற்க்கு மேல் சர்க்கரை சேர்க்க கூடாது.
தவறினால் புற்று நோய் உங்களுக்கு அருகாமையில் நாக்கை தொங்க போட்டுகொண்டு நிற்கிறது என்று அர்த்தம்.
* புற்று நோய் : மார்பக புற்றுநோய் வந்த 1300 பெண்கள் / புற்று நோய் அற்ற 1300 பெண்கள் / இவர்களிடம் 2005 முதல் 2008 வரை நடத்திய சோதனையில் – தூக்கம் இழந்தவர்களுக்கே 30 % உறுதியாக மார்பக புற்றுநோய் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆண்களுக்கு இது Prostate Cancer ஆக வருகிறது. தூக்கம் இழக்கும் நேரத்தில் மனதில் ஒலிக்க வேண்டிய குரல் … ” இங்கே தான் பக்கத்தில் நின்று கொண்டு இருக்கிறேன் ” என்கிற புற்று நோயின் அகங்காரக் குரல்.
* மனவியாதி –
தூக்கம் இழந்தால் மன balance ஐ இழப்பதே மன வியாதியின் ஆரம்பப்புள்ளி. Stress இங்கே தான் ஆரம்பம். இதுபற்றி பின்னே கவனிப்போம்.
* ஞாபக மறதி – இங்கே தானே எங்கோ வைத்தேன் ? என்று நீங்கள் நினைப்பது அடிக்கடி நடக்கிறதா ? அநேகமாய் நீங்கள் தூக்கத்தை தொலைத்த ஒருவராக இருக்க கூடும்.
* உடல் எடை கூடுதல் ;
ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவரா நீங்கள் ? நீங்களும் எட்டு மணி நேரம் தூங்குபவரும் ஒரே உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். (அப்படி எடுக்க முடியாது. தூக்கக் குறைவு அதிக Glucose வேண்டும் என்று கேட்கும். சர்க்கரைத் தொடர்பு இங்கே வருகிறது ! ). ஆனாலும் 06 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கியவர் 08 மணி நேரத்திற்கு தூங்கியவரை விட அதிக எடை பெற்றிருப்பார். ” குறைவாகத்தான் சாப்பிடுகிறேன், நன்கு உடற்பயிற்சி செய்கிறேன் .. ஆனாலும் எடை குறையவில்லை அல்லது மெதுவாக குறைகிறது ” என்று நீங்கள் முனகினால், நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முதல் கேள்வி .. சரியாக தூங்குகிறேனா ?
Heart Attack ; தூக்கத்திற்கும் இதயத்திற்குமான தொடர்பு கவனிக்கப்பட வேண்டியது. பிற்பகுதிகளில் இதை கவனிப்போம்.
Non Performance ;
“அவர் முன்ன மாதிரி இல்ல சார். ஒழுங்கா வேலை செய்வதில்லை ” என்று அலுவலகத்தில் உங்கள் காதுகளில் விழுகிறதா ? அநேகமாக அந்த அவர் தூக்கத்தை இழந்த மனிதராக இருக்க கூடும். அந்த அவர் நீங்களாகவும் இருக்க கூடும்.
Irish பழமொழி ஒன்று – ” நல்ல சிரிப்பும், நீண்ட தூக்கமும் – எந்த பிரச்சினைக்குமான இயற்கையின் மருத்துவர்கள் ” நினைவில் வருகிறது. இந்த இரு இயற்கை மருத்துவர்களை இழந்த பின், பணத்தை தூக்கிக்கொண்டு செயற்கை மருத்துவர்களை நோக்கி பயணிப்பது என்னவிதமான புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.
ஒரே ஒரு வரி உங்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கலாம்
” தூக்கத்தில் நீங்கள் செல்வந்தராக இல்லை எனில், ஒவ்வொருமுறை விழிக்கும்போதும் நீங்கள் ஏழையே ”
” If you are not sleep Rich, you stand certainly poor everytime when you wake up ”
பயணிப்போம்.
ஒரு செயல் முறை :
இரவு தூங்க சென்ற நேரம் : ?
காலை விழித்த நேரம் ; ?
வித்தியாசம் –
05 மணி நேரத்திற்கும் குறைவாக – பரம ஏழை
06 மணி நேரத்திற்கும் குறைவாக – ஏழை
07 மணி நேரம் – நடுத்தர வர்க்கம்
08 மணி நேரம் – செல்வந்தர்
08 மணி நேர தூக்கம், உடற்பயிற்சி, சர்க்கரை அற்ற, செயற்கை உணவுப் பொருட்கள் அற்ற வாழ்க்கை – பரம்பரை செல்வந்தர் ! 😊😊
யார் நீங்கள் ?
( உங்கள் பொருளாதார வசதி இதை தீர்மானிக்க போவதில்லை. எதிர்வரும் காலங்களில் .. தூக்க நேரமே செல்வந்தர் ஆகப்போவதின் குறியீடு ! )
யோசிப்போம் !