Q and A 014
சண்டை வந்தால் சமாதானம் ஆவது எப்படி? Kirthika
முதலில் சண்டை ஏன் வருகிறது ? சண்டை என்பது என்ன ? ஏன் சில சண்டைகள் சட்டென முடிகின்றன ? ஏன் சில தொடர்கின்றன ?
எண்ணங்களில் மாறுபாடே சண்டை. அலைவரிசையில் ஏற்படும் மாறுபடும் சண்டையே. நான் 10 வருடத்திற்கு முன் பழக ஆரம்பித்த நட்பு ஒன்றுடன் இன்னும் பயணிக்கிறேன். அந்த நட்பிடம் பல மாற்றங்கள். ஆனாலும் எம் நட்பு தொடர்கிறது. ஏன் ? மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. ஒப்புக்கொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு மாற்றம் நல்ல, நட்பிற்கு பயன்பெற கூடிய, குடும்பம் அடுத்த நிலையை அடைய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் . இப்படி இருக்கும்போது சண்டை வருவதில்லை.
1. மாற்றத்தை ஒப்புக்கொள்ள முடியாத போது
2. மாற்றம் சரியானதாக இல்லாத போது
3. மாற்றம் சரிதான். ஆனால் அட்ஜு “தனக்கு” சரியானதாக இல்லாத போது .. ( Selfish Act )
இந்த காரணிகளால் தான் சண்டை வருகிறது.
சில சண்டைகள் கோழிச்சண்டை போல இரவு வந்து காலை முடிந்துவிடும். மாற்றத்தை ஒப்புக்கொள்ள சரியான காரணம் சொல்லப்பட்டதும் எடுக்கப்பட்டதுமே காரணம்.
சில சண்டைகள் முடிவுக்கு வருவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்த போதும் … அது சண்டை என்பதை விட, அந்த ” சண்டை ” மூலமாக ஏதோ சொல்ல விரும்புவது மட்டுமே யதார்த்தம். பிரிவில் பேசப்படுவதெல்லாம் மீண்டும் இணைய அல்ல. பிரிந்ததன் சரியான காரணத்தை உலகிற்கு சொல்ல.
ஒரு சரியான காரணம் தெரியும் வரை மட்டுமே எந்த சண்டையும் கண்ணுக்கு எதிரே நிற்கும். காரணம் கிடைத்ததும் .. 1. சண்டை முடிவுக்கு வரும். அல்லது 2. உறவு முடிவுக்கு வரும்.
எந்த காரணத்தை தேர்ந்து எடுக்கிறோம் என்பதில் இருக்கிறது – வாழ்க்கையின் நகர்வு !
Personal ஆக என் பார்வை – பிடித்ததை பிடிக்காததை சொல்லிவிட்டு வாழ்க்கையை தொடர்வதே . அதற்கு மேல் இன்னொரு பக்கமும் விரும்பினால் வாழ்க்கையில் அவர் அவள் நட்பு தொடரட்டும். இல்லை எனில் … காலம் சிறந்த பதிலை இருவருக்கும் சொல்லும்.
உங்களின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன். இன்னும் கேள்விகள் இருப்பின் கேட்கவும்.





