தூக்கமது கண் விடேல் 003
#தூக்கமதுகண்விடேல் : 003
அதெல்லாம் சரி .. தூக்கம் என்றால் என்ன ?
தூக்கத்தை பற்றி விளக்குவது என்பது கிட்டத்தட்ட வாழ்க்கையை பற்றி விளக்குவதை போல. ஏன் எனில் இதைப்பற்றி இன்னும் யாரும் சரியாக சொல்லவில்லை.
ஆனாலும் பலரின் விளக்கத்தை படிக்கும்போது கீழே சொல்லும் விளக்கம் சரியாக பொருந்துகிறது.
” தூக்கம் என்பது மனம் மற்றும் உடலுக்கு இயற்கையாக கிடைக்க வேண்டிய ஓய்வில் – கண்கள் மூடி, விழிப்புணர்வு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழந்து ஏற்படும் நிகழ்வு. இப்படி இருக்கும்போது உடல் இயக்கங்கள் குறைந்து அல்லது நின்றுபோய் வெளி நிகழ்வுகளுக்கு எவ்வித response ம் இல்லாத ஒரு நிலையே தூக்கம் எனப்படும் ”
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா ? மிக எளிதாக புரிய ஒரே ஒரு வரி. இயற்கை அழைக்கும்போது கண்களை மூடி, வெளி உலகம் மறந்து நடக்கும் நிகழ்வே தூக்கம். அவ்வளவே. அப்படி தூங்கினால் நீங்கள் இயற்கையான மனிதர். அப்படி தூங்காமல் தூக்கத்தை தள்ளி போட்டீர்கள் என்றால் நீங்கள் செயற்கை மனிதர்.
இந்த தூக்கம் நமக்கு எவ்வளவு Gifts கொடுக்கிறது என்று கவனித்தால் இதை இழக்க விரும்ப மாட்டோம். அதற்கு முன் ஒரு முக்கிய விஷயம் ஒன்று இங்கே கவனிக்க வேண்டும். நாம் விழித்து இருக்கிறோமே ,அதை Technical ஆக சொன்னால் , Catabolic State .. என்று சொல்வோம். Catabolic state இல் உடல் தன்னை இழக்கிறது ! விழிக்கும்போது உடலின் பல சக்திகளை நாம் செலவழிக்கிறோம். அதே போல நாம் தூங்குவதை Technical ஆக சொன்னால், Anabolic state என்று சொல்வோம். Anabolic State இல் உடல் மீண்டும் கட்டப்படும். ஆச்சர்யம் என்னவெனில், இழப்பதை அதிகமாகவும், கட்டப்படுவதை குறைவாகவும் நாம் உடலுக்கு செய்கிறோம். ஆம். குறைவாக தூங்கும்போது .. உடல் கட்டப்படுவதை இழந்து, அதிகமாக விழித்து இருக்கும்போது .. நிறைய செலவழிக்கிறது. வரவு குறைவு. செலவு அதிகம்.
சரி. வரவை அதிகப்படுத்த நன்றாக மற்றும் தேவைப்பட்ட நேரத்திற்கு… தூங்க வேண்டும். ஒருவேளை நாம் நன்றாக தூங்கினால் .. கிட்டத்தட்ட 07 முதல் 08 மணி நேர தூக்கத்தை உடலுக்கு அளித்தால் .. என்னென்ன கிடைக்கிறது என்று கவனிப்போம்.
• உடல் வளர்ச்சி
• நோய் எதிர்ப்பு சக்தியை புதுப்பித்தல்
• எலும்பு network கினை புதுப்பித்தல்
• தசை பகுதிகளை புதுப்பித்தல்
• ஹார்மோன் களின் அளவை சரியாக்குதல்
• வளர்சிதை மாற்றத்தை ( metabolism ) அதிகப்படுத்துதல்
• உடலுக்கான சக்தியை அதிகப்படுத்துதல்
• மூளை யின் செயல்பாட்டினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுதல். ( Creativity இங்கே கிடைக்கும் இன்னொரு சிறப்பு பரிசு ! )
இந்த Gifts தினசரி உங்களுக்காக காத்திருக்கின்றன. தூங்கினால் கிடைக்கும். இல்லை எனில் கிடைக்காது. ஒரு நல்ல தூக்கம் உங்களை மீண்டுமாக உருவாக்குகிறது. அதாவது இளமையாக மாற்றி கொடுக்கிறது.
நம் சமுதாயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் நிறைய உழைக்க வேண்டும், குறைவாக தூங்க வேண்டும் என்று ஒரு பார்வை உண்டு. அப்படி இல்லை. 07 முதல் 08 மணி நேர தூக்கம் கொடுக்கும் சிறப்பான உடல் மற்றும் வேகமாக சிந்திக்கும் மூளை யை கொண்டு நாம் போதுலாதர வெற்றியை ஆரோக்கிய உடலுடன் எளிதாக பெறமுடியும். நாம் தான் எப்போதுமே எளிய விஷயங்களை குழப்பி கொள்பவர்களாயிற்றே ! தூக்கம் தவிர்த்து, பின் stress ஆல் பாதிக்கப்பட்டு, பின் அதற்கு மருந்து எடுத்து, கடைசியில் தூக்கத்திற்கும் மருந்து எடுக்கும் மனித அறிவை என்னவென்று வியப்பது ! இத்தனைக்கும் தூக்கம் இயற்கையாக, எளிதாக, இலவசமாக கிடைக்கும் கொடை !
தூங்காமல் வரும் மனிதர்களை கவனித்து இருக்கிறீர்களா ? அல்லது ஒரு 3 அல்லது 4 மணி நேரம் மட்டுமே தூங்கி வரும் மனிதர்களை கண்டதுண்டா ? அவர்களின் முகம் எதையோ இழந்து இருக்கும். சிரிப்பு காணாமல் போயிருக்கும். ஒருவித Tense ஆக சுற்றி கொண்டு இருப்பார்கள். தேவைக்கு அதிகமாக காபி சாப்பிடுவார்கள். சில முடிவுகளை என்ன ஏது என்று யோசிக்காமல் வேகமாக எடுப்பார்கள். பேச்சில் கோபம் கொப்புளிக்கும். வார்த்தைகள் நிதானமாக வெளியேறாது. எப்போது வீட்டுக்கு திரும்ப போய் rest எடுக்கலாம் என்கிற மனநிலை இருப்பதால் அலுவலக பணியில் மனம் நிலை கொள்ளாது.
ஆக .. இலவசமாய், இயற்கை கொடுக்கும் ஒரு உடல் Energiser ஐ விட்டுவிட்டு .. செயற்கை விழிப்பில்.. நிறைய இழக்கிறோம் என்று தோன்றவில்லையா உங்களுக்கு ?
தூக்கம் உங்களுக்கு அழகாக வர .. .. ஒரு சிறு பயிற்சி ;
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பவர்களா நீங்கள் ? ஒன்று செய்யலாம் நீங்கள். 100 இல் இருந்து reverse இல் 99 98 97 96 என்று மிக மெதுவாக .. ஆம் மிக மிக மெதுவாக, அவசரம் இன்றி .. எண்ணுங்கள். அநேகமாக 86 அல்லது 80 வரும்போது தூங்கி இருப்பீர்கள் – உங்களை அறியாமல் ! எளிதான இந்த பயிற்சி சில நாட்களுக்கு பின் தேவைப்படாது. ஆம். இந்த பயிற்சியின் மூலம் உடல் அதுவாகவே சட்டென தூங்கி விட தானே கற்றுக்கொள்ளும்.
உங்களின் 07 / 08 மணி நேர தூக்கத்திற்க்கு முன் வாழ்த்துக்கள்.