Slogging Songs : 001
10K slogging இல் ..சில பாடல்கள் எமக்கு மிக நெருக்கமாக உடன் வருபவை. அப்படி ஒரு பாடல் இன்று எம்முடன்.
என்னவோ தெரியவில்லை .. அந்த பாடலை கேட்ட பொழுதில் இருந்து இன்று வரை எம் Fav. என்னவோ செய்யும் பாடல்கள் என்று ஒரு List போடலாம். அந்த பாட்டின் அழகான மென் மெட்டும், இசையை பின்னுக்கு தள்ளி வெளிவரலாம் ஏகாந்த குரலும் … ஹ்ம்மம்.
” கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப்படம் எடுத்தேன் ”
கனவுகளில் புகைப்படம் சாத்தியம் எனில் இன்னொரு அழகான உலகத்தை நம்மால் நிச்சயமாக வெளிக்கொணர முடியும். அப்படி ஒரு உலகம் அது .. நாம் நினைக்கும் பச்சை வனத்திற்குள், சலனம் அற்ற நீர்க்குளத்தில், நகரா மீன்களுக்கு அருகில் .. கரையோர அமைதி உட்கார்தலை புகைப்படம் எடுப்பதை விட அழகான ஓர் உலகம் இருக்க முடியுமா என்ன ?
” என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன் ”
பிடித்தவர்களின் வாசனை என்று ஒன்று உண்டு. அது நம்மை வசீகரிக்கும். ஆட்கொள்ளும். மனித வாசனைகளில் அது மிகவும் special. நுகர்தல் போல ஓர் இன்பத்தை அப்போதன்றி நாம் அறியோம் !
” கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நான் பறந்தேன் ”
மழையில் குடை பறக்க நின்ற அனுபவம் உண்டா ? போகலாம் என்றே தோன்றும். அப்படியே பறந்துவோடுவோமே என்று மனம் யாசிக்கும். ஆனாலும் அறிவு எதிர்க்கும். நிறைய மனங்கள் பறக்க நினைத்து, ஆனாலும் அறிவுக்கு கட்டுப்பட்டு அப்படியே நிற்பது இங்கேதான். குடை இங்கே ஒரு குறியீடு. குடை காக்க அல்ல இங்கே. பறக்க. புரிந்தவர்கள் மகிழ் ராஜாக்கள். ராணிகள்.
” பெயரே தெரியாத பறவை அழைத்ததே ”
பெயர் தெரியா பறவை என்று ஒன்று உண்டு. இல்லை இல்லை. அனைத்தும் பெயர் தெரியா பறவைகள் தாம். பெயர் தெரியா மனித சந்திப்புகள் உதிர்க்கும் புன்னகைக்குள் ஏகப்பட்ட கவிதை நினைவுகள் உண்டு.
பெயர் தெரியவே வேண்டாம் என்றே நான் சிலரை கடந்து நிற்பதுண்டு. ஏன் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் ? என்னை கடந்த பறவை ஒன்று எனக்குள் ஏற்படுத்தும் மகிழ் அலை .. அது அப்படியே இருக்கட்டுமே ! அதற்கு பெயரிட்டு அதை conscious ஆக்குவதை விட .. Unconscious கவிதையாக அது இருக்கட்டுமே !
என்ன இன்னும் அந்த பாடல் இது என்று தெரியவில்லையா ? வரிகளை மீண்டும் பாடுங்களேன் .. முதல் வரி கிடைத்துவிடும். இன்று எம்முள் ஓடிக்கொண்டே இருக்கும் பாடலாக இது இருக்க கூடும். Kovai Race Course க்கும் அநேகமாக இந்த பாடல் கேட்க கூடும் !