Slogging Songs : 005
#sloggingsongs 005
” தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில் ”
தாய் மொழி அப்படித்தான். தாய்ப்பாலுடன் முதலில் சொன்ன ” ம்மா ” வை அடித்துக்கொள்ள இன்னும் ஒரு வார்த்தை பிறக்கவில்லை. Mom Dad எல்லாம் நகைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ” ம்மா ” போன்ற ஒரு உயிரில் கலக்கும் வார்த்தை உண்டா என்ன ? அந்த மொழி போலவே நீ என்னுடன் வாழ்கிறாய் என்று சொல்வதை விட உயர் அதிகாரம் கொடுக்க முடியுமா ஒரு மனைவி கணவனுக்கும், கணவன் மனைவிக்கும் அல்லது .. மனதுக்கு பிடித்த இருவர் தங்களுக்குள்ளும் !
நிழல் பிரிந்தால் மண்ணில் விழ வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. நிழல் இருந்த இடத்தில் இன்னொரு வாழ்க்கைக்கான அர்த்தத்தை ( கவனிக்கவும் இன்னொரு ஆளை சொல்லவில்லை ) பதிந்து நடக்க வேண்டியதே அறிவு. காதலில் அறிவு வேண்டும். இல்லை எனில் அது வெறும் emotional குப்பை. தூர இருக்கும்போது மணக்கும் அதுவே அருகே வர வர நாற்றம் எடுக்கும். அறிவு சேர் காதல் அருகே வராது. ஒரு அழகான space கொடுத்து இரண்டு மூச்சுக்களையும் இதமாக விட்டுக்கொள்ளும்.
” தாமதமாய் உனை கண்ட பின்னும்
தாய் மடியாய் வந்தாய்
நான் தூங்கவே ”
இவ்வுலகில் நிறைய உறவுகளை சந்திக்கும்போது நமக்குள் எழும் ஒரு இயல்பான கேள்வி ” நாம் ஏன் முதலிலேயே சந்திக்கவில்லை ? “. கொஞ்சம் கடின ஆனால் சிரித்து கடக்க வேண்டிய நமக்கு மட்டுமே பதில் தெரிந்த முக்கிய கேள்வி இது. இந்த கேள்வியை நாம் சம்பந்தப்பட்ட மனிதர்களிடம் கேட்டுவிட்டு அமைதியாகி விடுகிறோம். அந்த அமைதியில் பூக்கும் மௌன பூக்களை யாரும் பறிக்க முடியாது. ஆம். பறிக்கவே முடியாது.
தாய் மடியாய் நம்மில் எத்தனை பேர் மனம் பிடித்தவர்களுடன் உறங்குகிறோம் என்று தெரியவில்லை ! மடி சாய்ந்த தலையில் நெற்றியில் வருடும் விரல்களை விட சிறந்த சாமரம் உலகில் உண்டா என்ன ? உடல் இணைதல் எல்லாம் இருக்கட்டும். இந்த வருடலில் தூங்கிப்போகும் மனம் பிடித்தவர்களின் முக அமைதி போல் ஓர் நிறைவு உண்டா ? அனுபவித்தவர்களுக்கு இது புரியும். மற்றவர்களுக்கு ? வெற்று உடல் இணைதலில் வாழ்க்கை முடிந்து போகும்.
” உன் பாதியும்
எம் மீதியும்
ஒன்றே தான்
என்று வாழ்கிறேன் ”
ஒன்றாக வாழ்தல் வரம். நடிக்காமல், பொய் சொல்லாமல், முகமூடி அணியாமல், கடினத்தை பகிர்ந்து ஒன்றாக வாழ்தலில் இருக்கிறது சொர்க்கம். வீடு வாங்குவதில் அல்ல. அப்படி வாழ் முடியாதவர்கள் ?
” வாழ முயற்சிக்கிறார்கள் ” என்பது எம் பதில்.
பாடல் கண்டுபிடிக்க முடிந்ததா ?
” Ok Baby ” என்று சேதுபதியார் சொல்வது கேட்டிருக்க வேண்டுமே !
( காணாமல் போகும் வயிற்றுக்கு பொறுப்பேற்க்க Green Tea யை அழைக்கிறேன். வெளியே சென்ற சர்க்கரை ஏக்கமாய் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல 😊😊😊 !! )





