Slogging Songs : 006
#sloggingSongs : 006
” விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வியர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள் ”
Heat என்று சொல்லப்படும் உஷ்ணம் காதல் உணர்வில் அதிகம். Hormones எக்குதப்பாக எகிறும் வேளைகளில், balance இழந்து, உரசல் அதிகமாகி, உஷ்ணம் ஏறும் வேலைகள் .. நிச்சயமாக காலை மாலை வேளைகள் – காதலில் ! விரல் பட்டவுடன் சுளீரென்று பாயும் இயற்கை மின்சாரம் இதுவரை யாராலும் கண்டறிய முடியாதது. ஏன் என்ற காரணம் அறிவியலில் சொல்லிவிட முடியும். ஆனால் .. உணர்வு அறிவியலில் ? அது இருவருக்கு மட்டுமே வெளிச்சம் ! இல்லை இல்லை இருள் ! 😊😊
ஒவ்வொருவர் வாழ்விலும் போர்வை நொடிகள் உண்டு. சுகமாக அங்கேயே வாழ்ந்து விடுவோம் என்று என்னும் தனி மனித வாழ்க்கைக்கும், ஏதோ ஒன்றில் சார்ந்துகொண்டு அழகாய் தவழும் இணை வாழ்க்கைக்கும் இந்த போர்வை நொடிகள் பொதுவான விதி. போர்வை நொடிகளில் தன்னை இழந்தவர்கள் முகம் மறுநாள் முழுக்க பளிச் ! 😊😊 #தூக்கமதுகண்விடேல்
” தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மலர்ந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய் ‘
‘ எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள். ஆனால் விழியோரம் தான் மலர்கிறாய் இங்கே ‘ என்று சொல்லும் தையிரியம் வேண்டும் காதலில் ! இருக்கிறதா உங்களிடம் ? தொலைபேசியில் ‘ எங்க இருக்க ‘ என்று கேட்பதற்கு பதில் .. விழியோரம் இருப்பதால் நீர் எங்கே இருக்கிறீர் என்ற கவலை இல்லை எனக்கு ‘ என்று பேச முடியுமா உங்களால் ? காதலில் விழ தகுதி உண்டு உங்களுக்கு. ( எங்கே இருக்கிறாய் என்பதற்கு .. Verification Code மட்டும்தான் இன்னும் வரவில்லை சில கணவர்களுக்கு ! 😊😊😊 மனைவிக்கும் ! )
கலத்தல் என்பது முதலில் உடலில் நிகழ்கிறது எனில் நீங்கள் ஒரு Infatuated Human. முதலில் உணர்வில் கலந்து பின் இன்னொரு கலத்தல் அதுவாக நிகழும் எனில் .. நீங்கள் Blessed Human – உங்களின் காதல் வயப்பட்டு இருப்பதாய் நீங்கள் பொருள் கொள்ளலாம் – திருமணத்திலும் !
” பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி ”
பிடிவாதம் பிடித்துக்கொள் என்று இன்னும் கணவனால் மனைவியிடம் சொல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம். ஆனால் மனைவி அவன் பிடிவாதம் பிடிக்க வேண்டும் என விரும்புகிறாள். கெஞ்சல் கணவ மனைவி உறவில் ஏனோ மனைவியிடம் எதிர்பார்ப்பாக ஆனால் கணவனிடம் Ego கலந்த செய்யவேண்டுமா வேண்டாமா வாக இருக்கிறது. ” சினம் தீரும் வரை என்னை அடித்துக்கொள் ” என்று சொல்ல முடிந்த உறவுகளில் அணைத்தல் மட்டுமே நிகழும் அதிசயம் தான் என்னவோ ?
இந்த தோட்டாவிற்காக காத்திருக்கிறேன். படமாக்கப்படும் விதம் நிச்சயமாக சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
என்ன உங்களுக்கு பாடல் வரிகள் புலப்படுகிறதா ?
கண்டுபிடிப்போம்.





