Slogging Songs : 008
#SloggingSongs ; 008
” என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம் ”இணைவது உடலில் என்று குழம்பி குழப்பி கொள்பவர்களுக்கு இந்த வரிகள் புரியப்போவதில்லை. ஆத்மார்த்த இணைவில் உடல் just ஒரு மௌன communicator.
கை கோர்த்து நடப்பது சரி. ஆனால் .. நெஞ்சம் கோர்த்து நடப்பது ? ஆம். Virtual உலகின் இணைதல் அது. கொஞ்சும் உலகம் அங்கே இலவசம். கொஞ்சுவதில் மட்டுமே Ego உடையும். Ego உடன் கொஞ்சல் எங்காவது கவனித்தது உண்டா ? ஆளுமையுடன் கொஞ்சல் வேறு. ஆக .. இந்த உலகின் Ego உடைப்பிற்கான சர்வ ரோக நிவாரணி – கொஞ்சல்.
” பொய்கள் கரையும் உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் நினைவை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ ”பொய்கள் கரைய வேண்டும் உறவில். பொய்கள் வளரும் உறவு Mask அணிந்த ஆடுபுலி ஆட்டம். பொய்கள் கரைய இதுவே நான் என்று சொல்லும் நேர்மை plus வீரம் தான் ஆளுமையின் முதல் பக்கம். இதை காதலில் பார்த்தவர்கள் .. Blessed Souls.
நினைவை குடித்து பசி ஆற்றும் பிரிவுகளை கவனிக்கிறேன். நீண்ட நாள் பிரிவுக்கு best diet நினைவுகளே. அதுவும் .. நல் நினைவுகள் ? சைவ Diet ன் best sample அவை. உடலை மெருகேற்றும்.
” உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசிப்பதால் ”அகத்தில் வசித்தால் புறம் சிவக்கும். நாணச் சிவப்பு அது. அந்த சிவப்பை உணர்ந்தவர்கள் ” I am in Love ” என்று அழகாய் சொல்லலாம். அகத்தின் இயல்பு நல் உணர்வை சேமிப்பது. புறத்தின் இயல்பு அதை Transparent ஆக வெளிக்கு எடுத்து செல்வது.
அகத்தில் வாழ்வோம். நாணம் பழகுவோம். Ego உடைப்போம். நெஞ்சம் கோர்ப்போம்.
வாழ்க்கை ஒரே ஓரு முறை மட்டுமே !
என்ன பாடலாக இருக்க கூடும் ?