Slogging Songs 010
” பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல,
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு!
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு! ”
நீர் சென்ற பின் தான் துணிகளில் சிறு space இருப்பதே நமக்கு தெரியும். அப்படி இருக்கும் உறவுகள் அழகானவை. வெளியே அப்படி ஓர் உறுதி. ஆனால் உள்ளே அழகான space. Counselling கிற்கு வரும் நிறைய couples இடம் நான் சிரித்து சொல்வது … ” அந்த space அப்படியே இருக்கட்டுமே. வார்த்தைகளால் ஏன் அதை இடிக்க வேண்டும் ? ”
“அள்ளி அள்ளித் தந்து உறவாடும்,
அன்னை மடி இந்த நிலம் போல,
சிலருக்கு தான் மனசு இருக்கு!
உலகமதில் நிலச்சு இருக்கு! ”
உறவில் ‘மனசு’ இருப்பது போல உறவு உண்டா ? ‘ மனசு ‘ இருக்கும் உறவுகளில் உயிர் இருக்கும். ” மனசே இல்லையா உனக்கு ‘ என்று கேட்பது இங்கேதான் வருகிறது. உடல் இருக்கிறது. உறவும் கூட இருக்கிறது. ‘மனசு’ இல்லை எனில் ?. சரி அது என்ன ‘ மனசு ‘? சினிமாக்கள் சொல்லி இருப்பது போல அது இரண்டு ரோஜாக்கள் இணைவது இல்லை. மனசு – என்பது இரு ஆளுமைகளின் நியாயம் புரிவது. ” அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது ” என்று பக்கத்தில் இருந்தே யோசிப்பது. ” அவளுக்கும் சில ஆசைகள் இருக்கக்கூடும் ” என்று அருகில் இருந்து புரிவது. ” என் மனைவியாக இருந்தாலும் உன் ஆசைகளை நான் உணர்கிறேன் ” என்று சொல்லாமல் செயல்களால் நிரூபிப்பது. செய்யும் கணவ மனைவிகள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஏன் எனில் உறவின் ” துணியில் நீர் புகுந்த பின்னே தெரியும் space இருக்கிறது ” என்பதை அவர்கள் உணரக்கூடும்.
” நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல!
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல! ”
துணையற்ற நாட்கள் – ஒருவித சோகம். ஆனாலும் ஒருவித தனி உணர் நிலையின் ஆனந்தம். தனி உணர் நிலையில் பேச்சு உள்ளுக்குள் நடக்கும். கடந்த கால best நினைவுகள் உடன் பயணிக்கும். வானம் பார்த்து சிரிக்க வைக்கும். அதே நேரம் .. வழித்துணையாக யாரோ வந்தால் … அதற்கு இணை இல்லை. வந்தால் .. இங்கு முக்கியமானது. கூப்பிட்டு துணையாக வருவதற்கும், தானே வருகிறேன் என்று சொல்லி வருவதற்கும் வித்தியாசம் உண்டு. நானே வருகிறேன் என்று ஆரம்பிக்கப்படும் வாழ்க்கை போல சுகம் ஒன்று உண்டா என்ன ? நானே வருகிறேன் என்பது ego உடையும் விஷயம் அல்ல. யதார்த்தம் நெருங்கும் நேரம் !
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே!
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல! ”
தனித்து என்று ஏதாவது இருக்கிறதா உலகில் ? வாய்ப்பே இல்லை. தனித்து இருப்பதாக சொன்னால் தன்னை இன்னும் உணரவில்லை என்றே அர்த்தம். நட்பு, உறவு, திறமை, என்று ஏதோ ஒன்று நம்முடன் பயணித்து கொண்டே இருக்கிறது. புரிந்தவர்கள் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ? வாழாது இருக்க காரணம் கண்டுபிடிக்கிறார்கள்.
என்ன பாடல் உள்ளே இழைகிறதா ? இந்த பாடலின் ஒவ்வொரு frame மும் ரசிக்கப்படவேண்டியவை. கண்கள் பேசும் ! உடல்மொழி அட்டகாசம்.