Slogging Songs 011
#SloggingSongs 011
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழிவதா ? அது எப்படி முடியும் ? நாம் இதுவரை சுகம் என்றால் என்னவோ என்றல்லவா நினைத்தோம் ? இல்லை. விழியில், காட்சியில், ஒரு பார்வையில் இருக்கிறது சுகம். வண்ணக் கலவையான சட்டென கிடைக்கும் சுகம் அது. ஒரே ஒரு பார்வையில் அமைதி வருகிறதே – அதுதான் மாயத்தின் உச்சக்கட்டம். புரிதல் சரியாக இருக்கும் இருவர் ஒருவரை ஒருவர் நோக்கும்போது வார்த்தைகள் அவசியம் அற்று போகிறது. வேறு மொழியில் சொன்னால் … புரிதல் இல்லாதவர்கள் தான் வார்த்தைகளால் சத்தமாக பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
அன்பு என்ற நதி அணைக்குள் அடங்குவதில்லை. ஆனால் புரிதல் கொண்ட மனம் சொல்லும் ஒரு வரியில் அதே நதி நகராது static ஆக நிற்கும். நினைவினில் வழி தேடப்பட்டு கொண்டே இருக்கும். நினைவு நதியில், வழி தேடிக்கொண்டே பாடும் பாடல் ஒன்றை அதே அலைவரிசை மனதால் மட்டுமே கேட்க இயலும்.
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
என்ன அழகான வரிகள் ! ஒரு நதியும், முழு நிலாவும், இரு இதயத்தில் பதியும் போது ரதியும் அதன் பதியும் ( இணையும் ) பெரும் சுகமே உதயம். வார்த்தைகளே தேவை இல்லை பொருள் விளங்க.
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் பயிரானது உன் நினைவுகள்
சில வரிகளை அப்படியே சுவைப்பது நன்று. மேலே உள்ள இந்த வரிகளும் அப்படியே.
வரிகள் முத்துத்தேவன் என்று இருக்கிறது. யார் என்று தெரியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கேட்க சலிப்பு ஏற்படாத அழகான பாடல்.
என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா ?