தூக்கமது கண் விடேல் 005
நல்ல தூக்கத்தை நமக்கு தருவது சூரிய ஒளி என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம். அறிவியல் அதை நிரூபிக்கிறது. மிக முக்கியமான இந்த உண்மையை இப்போது கவனிப்போம்.
நம் உடலில் இருக்கும் ” Circadian Timing System ” , மூளையில் இருக்கும் Hypothalamas இல் – ஒரு குழுவாக இருக்கும் நரம்பு செல்களால் இயக்கப்படுகிறது. இந்த நரம்பு செல்கள் – Suprachiasmatic nucleaus என்று அழைக்கப்படுகிறது. Hypothalamas தான் நம் உடலின் Hormonal system மை சரியாக வைத்திருக்க உதவுகிறது. இந்த Hypothalamas தான் நம் உடலின் பசி, தாகம், தொய்வு, உடல் வெப்பநிலை மற்றும் உடலுக்கான தூக்க அட்டவணை போன்றவற்றை ஒரு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.
சரி .. சூரியன் இதில் எங்கே வருகிறது ? காலை சூரிய ஒளி ( கவனிக்கவும் காலை சூரிய ஒளி ) Hypothalamus மற்றும் அது சம்பந்தமான உறுப்புகள், Glands .. அனைத்தையும் ” எழுந்திரு ” என்று எழுப்பிவிடுகின்றன. நம் உடலின் ” பகல் நேரத்து Hormones ” களை இந்த சூரிய ஒளி அதிக பட்ச உற்பத்தியை நோக்கி இழுத்து செல்கிறது. அதே சூரிய ஒளி நம் உடலின் ” Biological Clock ” ஐயும் ஒழுங்காக வைத்திருக்கிறது. ஒருவேளை நம் உடல் வாங்க வேண்டிய சூரிய ஒளியை ஒழுங்காக வாங்கவில்லை எனில் … அது பாதிப்பை முதலில் ஏற்படுத்தும் பக்கம் – நம் தூக்கம். ஆச்சரியமாக இல்லை ? ஆம். சூரிய ஒளி நம் Hypothalamus ஐயும், Biological Clock ஐயும் ஒழுங்காக வைத்து நம்மை சரியான நேரத்தில் தூக்கத்த்திற்கு அழைக்கிறது.
நம் உடலில் Pineal Gland என்று ஒன்று இருக்கிறது. இது உருவாக்கும் AntiOxidant Harmone தான் Melatonin. இந்த மெலடோனின் தான் நம்மை சரியான நேரத்தில் தூக்கத்த்திற்கு அழைக்கும். இதை தூக்க Hormone என்று சொல்வது தவறு. ஆனால் தூக்கத்தை கொண்டு வரும் Hormone என்று சொன்னால் அது சரி.
வெளிப்புற ஒளி குறைய குறைய இந்த melatonin சுரப்பு அதிகமாகவும், தூக்கம் இயல்பாகவும் நம்மை நோக்கி வரும். பகல் ஒளி Hypothalamus ஐ active ஆகவும், Biological Clock ஐ சரியாகவும் வைத்திருக்க, ஒளி குறைதல் ( அதாவது பின் மாலை அல்லது இரவு ) Melatonin ஐ சுரக்க வைத்து நம்மை நன்றாக தூங்க வைக்கிறது. வேறு மாதிரி சொல்ல வேண்டும் எனில் .. Melatonin தான் நம் உடலுக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் Natural தாய் !
தூக்கத்திற்கான ஓரு சிறிய formula ஒன்றை கவனிப்போமா ?
பகலில் காலை 06 மணி முதல் 08 மணிக்குள் சூரிய ஒளி உடலில் பட, Hypothalamus மற்றும் Biological Clock அட்டகாசமாக வேலை செய்ய ஆரம்பித்து Rhythm மை உடலில் set செய்கிறது. மாலையில் வெளிச்சம் குறைய குறைய Melatonin உற்பத்தி அழகாக உருவாகி Natural தாலாட்டு பாடி உடலை தூங்க வைக்கிறது.
ஆக … இரவு முழித்து வேலை பார்க்கும்போது முதலில் நாம் கெடுப்பது PIneal Gland ஐ தான். அங்கே இயற்க்கையான தூக்கத்தை கெடுத்து விட்டு, காலை எழ முடியாது போவதால், 06 முதல் 08 மணி வரையிலான சூரிய ஒளியை இழக்கிறோம். Hypothalamus மற்றும் Biological Clock ஐ Disturb செய்ய .. விட்டதை .. விட்டத்தை பார்த்து தூங்க முடியாமல் புரள ஆரம்பிப்பது இங்கேதான் !
ஒரு சோதனையில் இந்த காலை மாலை சூரிய ஒளியை இழப்பவர்களிடம் சோதனை நடத்தியதில் கிடைத்த அவர்களின் தூக்க அளவிற்க்கும், அதை சரியாக Follow செய்பவர்களின் தூக்க அளவுகளை ஆராய்ந்த போது .. சூரிய ஒளியை காலையில் இழப்பவர்களின் 46 நிமிட தூக்கம் காணாமல் போகிறது. அதாவது ஒரு 07 மணி நேர தூக்கத்த்தில் .. 420 நிமிட தூக்கத்தில் கிட்டத்தட்ட 11 % வீணாக போகிறது.
இதற்கு முன் கட்டுரையில் சொன்னது ஞாபகம் வருகிறதா ?
அதாவது Catabolic state – உடல் ஆற்றலை இழக்கும் state இல் 46 நிமிடங்கள் செலவாகின்றன. அதேபோல .. Anabolic state – உடல் கட்டுமான state இலும் .. 46 நிமிடங்கள் வீணாக போகின்றன !
பயிற்சி ;
என்ன ஆனாலும் காலை 06 மணி முதல் 08 மணி வரையிலான சூரிய ஒளி உடலில் படுமாறு நாளை முதல் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் சூரிய ஒளி உடல் மேல் படுமாறு .. வெட்ட வெளியில் நடை பழகலாம்.
அதேபோல .. இருளை விரைவில் வீட்டிற்குள் கொண்டு வருவது. வெளிச்சம் இல்லை எனில், கண்கள் இயல்பாக இரவு வந்துவிட்டது என்று நினைத்து .. நம்மை தூக்கத்திற்கு அழைத்து சென்றுவிடும்.
எடிசனை எவ்வளவுக்கெவ்வளவு பாராட்டுகிறோமோ .. அவ்வளவுக்கவ்வளவு அவரது வெளிச்ச கண்டுபிடிப்புகள் மேல் நம் கோபமும் வரவேண்டும். ஏன் எனில் அவை தான் நம் தூக்க இழப்பிற்கான வெளிச்ச காரணம். வெளிச்சம் வந்தவுடன் நம் கண்களுக்கு அது சூரிய ஒளியா ? சூரியன் ஏன் இன்னும் மறையவில்லை ?
என்றெல்லாம் தெரியாது. அல்லது கேட்காது. அதை பொறுத்தவரை வெளிச்சம் எனில் ACTIVE ஆகிவிடும். வெளிச்சம் இல்லை எனில் தூங்கிவிடும்.
வேறொன்றும் கண்கள் அறியா !.
ஆக .. காலை வெளிச்சமும், இரவு இருட்டும் சரியான இயற்கை காரணங்கள் நம்மை தூங்க வைக்க !
யோசிப்போம். பயணிப்போம்.