நம்பிக்கை மனிதர்கள் 005
#நம்பிக்கைமனிதர்கள்
#RoleModel – Viswa Srikar
பல வருடங்களாக அவரை கவனிக்கிறேன். அமைதி அவரின் பலம். தனக்குள் இருக்கும் இலக்கை நோக்கிய பயணத்தில் அவருக்குள் நிறைய கேள்விகள். அந்த கேள்விகளுக்கு பதிலையும் அவரே கண்டுபிடித்து, அதே அமைதியுடன் பயணிப்பதே அவரின் சிறப்பான நிலை.
Fitness அவருக்கு மிகப்பிடித்த விஷயம். அதையே வாழ்வியலாக எடுக்க மனதிற்குள் திட்டம். அவரின் படிப்பு காலங்களை முடித்த பின் ஒரு Fitness Business Model ஐ அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். Recent ஆக Six Pack கில் அசத்தல். நினைத்தால் செய்து முடிக்கும் திறமை. Practitioners இல் அபார கவனிக்கும் திறன்.
பிறந்த நாளன்று சந்தித்தோம்.
” Uncle .. நல்லா குறைச்சிட்டீங்க ”
” இல்லை. இனிமேல்தான் ஆரம்பம். நீங்க தான் Role Model. இந்த உடல் இப்போது எடை இழப்பில் தளர்ந்து இருக்கும். ( 36 Pant இப்போது இலேசாக தொள தொள என்று ! 😊😊 )
67.5 என் இலக்கு. அதை தொட்டவுடன், Gym பயணம் ஆரம்பம். ”
” வாழ்த்துக்கள் Uncle. ”
” அப்பவும் வருவேன். இதே இடத்தில் புகைப்படம் எடுக்கிறோம். நீங்களே எம் Role Model ”
சிரித்தார்.
Muthu Manikkam புகைப்படம் ( ஒரு அப்பாவுக்குள் தம் மகனை Role Model என்று கேட்கப்படுவதின் முகத்தை கவனிக்க முடிந்தது ! ) எடுக்க.. இங்கே உங்களின் பார்வைக்கு.
ஏதோ ஒரு நாளில் இன்னொரு புகைப்படம் வெளிவரும். Srikar உடன். அப்போது Six Pack உடலின் பகுதியாக மாறக்கூடும். இங்கே Six Pack என்பது .. Apperance கான ஒன்றல்ல. இலக்கிற்கான அடையாளம்.
#நான்வீழ்வேனென்றுநினைத்தாயோ ?
#பாக்கதானபோற