தூக்கமது கண் விடேல் 006
#தூக்கமதுகண்விடேல்
Computer, Television, Ipad, Tabs, Mobile Phones, laptops .. இந்த உபகரணங்கள் அனைத்தும் செய்யும் ஒரு வேலை என்ன தெரியுமா ? நீலக் கதிர் உமிழ்வது. அது என்ன நீலக் கதிர் ? அது என்ன செய்யும் ? இவை ஏன் அவற்றினை உமிழ்கின்றன ?
ஒளியில் பல வண்ணம் உண்டு. அதில் நீலமும் ஒன்று. இந்த நீல வண்ணம் கொடுக்கும் ஒளியில் தான் நாம் அனைத்து Digital உபகரணங்களையும் பார்க்கிறோம். சூரிய ஒளியிலும் இதே நீலக் கதிர் இருக்கின்றது. பின் ஏன் இந்த Digital உபகரணங்களை பார்க்கும்போது மட்டும் கெடுதல் ? காரணம் மிக எளிது.
இந்த உபகரணங்களை நாம் தொடர்ச்சியாக பார்க்கிறோம். ஆம். மணிக்கணக்கில். ஆக .. கண்ணுக்கு எது உபகரணம், எது சூரியன் என்றெல்லாம் தெரியாது. உடனே அது இவற்றினை ‘நாள் வெளிச்சம்’ என்று நினைத்து நிறைய hormones ஐ சுரக்க ஆரம்பிக்கும் Cortisol உட்பட. என்ன ஆகும் இதனால் ? தூக்கம் போயே போச் !
இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக Mobile, TV, Ipad, Tab, laptop .. போன்றவற்றினை பார்க்கும்போது … melatonin சுரப்பு தொந்தரவுக்கு உள்ளாகி, நின்று போக, தூக்கம் நம்மை விட்டு வெளியேறும். ஆக .. இயற்கையாய் வரும் தூக்கத்தை.. செயற்கை ஒளி கொண்டு இழக்கிறோம். என்னே புத்திசாலித்தனம் !
அப்படியானால் இந்த உபகரணங்களை பார்க்க கூடாதா ? இல்லை. பார்க்கலாம். ஆனால் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு பார்க்கலாம்.
* 20 /20 /20 rule – அதாவது 20 நிமிடம் பார்த்துவிட்டு ஒரு சிறு break எடுப்பது நலம். ( அவ்வப்போது பார்ப்பது அதை விட best. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பார்ப்பது இன்னும் best 😊😊 )
* கண்களை எப்போது கடைசியாக check செய்தீர்கள் ? நாம் இந்த உபகரணங்களை பார்க்க தேவையான கண்கள் நமக்கு இருக்கிறதா அல்லது கண்ணாடி அணிய வேண்டுமா ? இதற்கு முதலில் பதில் தேவை. பொதுவாக நாம் கண்களில் பிரச்சினை வரும்வரை பிரச்சினை இல்லை என்று நினைப்போம்.
* Computer ஒரு கை தூர அளவிற்க்கு வைத்து கவனிப்பது நன்மை. Mobile phones உட்பட அனைத்தையும் தூர வைத்து கவனிப்பது மிகவும் நலம்.
* Anti Glare Filters / Blue Ray Blockers ஐ அனைத்து உபகரணங்களிலும் install செய்வது நல்லது. அதேபோல .. Contrast மற்றும் Brightness ஐ adjust செய்வதும் !
* Screen ஐ அவ்வப்போது Clean செய்வது கண்ணுக்கு நன்மை. இல்லை எனில் கண் மிகவும் சிரமப்பட்டு காட்சிகளை கவனிக்கும்.
சரி .. இதெல்லாம் செய்து ?
இதெல்லாம் செய்தால் தூக்கம் நன்றாக வரும் என்று அர்த்தம் அல்ல. இதெல்லாம் செய்த பின் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் உண்டு. அவற்றை கவனிப்போம்.
* தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் அனைத்து உபகரணங்களில் இருந்தும் ‘பார்வை விடுதலை’ வேண்டும். இது கண்ணை சூரியன் இல்லை என்று நம்பச் செய்து தூக்கத்திற்க்கு தயார் செய்யும். Bright Lights, Discotheque .. போன்றவை தூக்கத்தை கெடுப்பவை. இரவுக் காட்சி, இரவு பார்க்கும் விளையாட்டு, Night Drive .. அனைத்தும் தூக்க எதிரிகள். ( பகலில் விளையாட்டு வைத்தால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ! நாள் முழுக்க அலுவலகத்தில் இருந்துவிட்டு இரவில் ஒட்டிக்கொள்ளலாம் என்று தான் நம்மின் பொருளாதார இலட்சணமும் இருக்கிறது 😊😊 ! )
* புத்தகங்கள் என்று ஒன்று இருக்கிறதே .. அநேகமாக மறந்துவிட்டோம் நாம். இது கண்களுக்கு நல்லது. நல்ல விஷயங்களை உள்ளே கொடுத்துவிட்டு கண்களையும் சோர்வாக ( இயற்கையான movements ஆல் 😊😊 ) மாற்றுவதால் தூக்கம் அழகாக வரும்.
* புத்தகங்கள் போல இன்னொரு அழகான activity – மனிதர்களுடன் பேசுவது. அதுவும் நல்ல இனிமையான உணர்வுகளை கொடுக்கும் மனிதர்களுடன் ! இது இயல்பான தூக்கத்தை உறுதி செய்யும் !
என்ன தூக்கத்தை மதிப்போமா ?