தூக்கமது கண்விடேல் : 007
#தூக்கமதுகண்விடேல் 007
தூக்கத்திற்கு நிறைய எதிரிகள் உண்டு. அதில் ஒன்றை இப்போது கவனிப்போம். நம்முடன் இருந்து கொண்டே, நம்மை வசீகரித்துக்கொண்டே நம் தூக்கத்தை கொல்லும் அது என்ன என்று கேட்க தோன்றுகிறதா ? கவனிப்போம்.
” அதை ” படுப்பதற்கு 12 மணி நேரம் முன்பு, 06 மணி நேரம் முன்பு, 03 மணி நேரம் முன்பு .. எப்போது எடுத்தாலும் தூக்கத்தை காலி செய்கிறது. 12 மணி நேரத்திற்கு முன் எடுத்தால் 30 நிமிட தூக்கம் நம்மிடம் இருந்து தொலைந்து போகிறது. 06 மணி நேரத்திற்கு முன்பு எனில் 01மணி நேர தூக்கம் போயே போச். 03 மணி நேரத்திற்கு முன் எனில் 1.5 மணி நேர தூக்கம் போயிந்தே !
ஆக .. நாம் ” அதனுடன் ” ஒரு deal போடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதென்ன deal ?
நாம் active ஆக இருக்கும்போது, நம் neurons .. Adenosine என்ற ஒன்றை சுரக்கிறது. இது ஒரு waste product என்றாலும், இது உடலை rest நோக்கி இழுக்கும் அதிசய waste ! அதாவது இயற்கை ஒரு பொருளை சுரக்கிறது. அதற்கு எந்த பயனும் இல்லை .. ஆனால் அது வருவது நம்மை தூங்க வைக்க !. இப்போது நம் ” அதற்கு ” வருவோம். இந்த Adenosine ம் நம் ” அதுவும் “ஒரே மாதிரி Structure இல் வாழ்பவை. ஆக Adenosine இருக்க வேண்டிய இடத்தில் ” அது ” இருக்கிறது. ஏற்கெனவே ” அது ” தூக்கத்தை கெடுப்பது என்று சொன்னோம். இப்போது ” அது ” rest எடுக்க உதவும் Adenosine ஐ வர விடாமல் தடுத்து, rest எடுக்க விடாமல் செய்து .. !! புரிகிறதா ?” அது ” எவ்வளவு powerful என்று !! உடல் tired ஆகிக்கொண்டு இருக்கிறது. Adenosine வந்தால் rest நோக்கி செல்ல வேண்டிய உடல், அதே போல இருக்கும் ” அது ” வருவதால் இன்னும் பரபரப்பாக மாறுகிறது. உள்ளே அசதி, வெளியே பரபரப்பு .. இதில் உடல் முதலில் இழப்பது தூக்கம். இரண்டாவதாக இழப்பது .. Balance. ஆக Stress கண் முன்னே நடனம் ஆட ஆரம்பிக்கும்.
ஒரு அதிசய Calculation சொல்லவா ? நீங்கள் ” அதை ” 200 Mg எடுத்தால் 08 மணி நேரம் கழித்து, இன்னும் உடலில் அது 100 Mg இருக்கும். 16 மணி நேரம் கழித்து 50 Mg இருக்கும். 24 மணி நேரம் கழித்து 25 Mg இருக்கும். இப்படித்தான் ” அது ” உடலில் இருந்து வெளியேறும். ஆக 200Mg வெளியேற 2 நாட்கள் ஆகும். அப்படி ஒரு அதிசய நச்சு ” அது “.
அந்த ” அது ” என்ன என்று தானே உள்ளே ஓடுகிறது இப்போது உங்களுக்கு ? சொல்கிறேன்.
அதற்கு முன் ” அதை ” சரியாக உபயோகித்தால் .. ” அது ” தூக்கத்தை கெடுக்காமல், உடல் எடை குறைப்புக்கும் உதவும். எப்படி என்று தோன்றுகிறதா ?
* மதியம் 02.00 மணிக்கு மேல் ” அதை ” எடுக்கவில்லை எனில், நல்ல தூக்கம் உறுதி.
* ஒரு முறை எடுத்தால் இரண்டு நாட்கள் எடுக்கவில்லை எனில், அது உடலில் இருந்து வெளியேறி, அதே நேரம் கொஞ்சம் energy யை கொடுத்துவிட்டு காணாமல் போவதால் ( உடற்பயிற்சி செய்தால் ! ) … weight loss இல் அது கொஞ்சம் பயன்படும். அதாவது ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துவிட்டு, நான்கு நாட்கள் எடுக்காமல் இருக்கலாம். ஒரு மாதம் எடுத்துவிட்டு இரண்டு மாதம் எடுக்காமல் இருந்தால் .. என்று ” அதனுடன் ” பயணிக்கலாம்.
* இன்னும் ஒரு ரகசியம் இருக்கிறது. எப்போதாவது ” அதை ” உபயோகித்தால், அதன் முழு பலனும் கிடைக்கும். ஒரு முக்கிய சவாலான தருணம். அப்போது ” அதை ” உட்கொள்வது பெரும் பலன். ( அதாவது தினசரி பழக்கமாக இல்லாமல் ! ). சவாலான நேரங்களில் உடல் neurons களின் இயக்க முறை வேறு. அப்போது ” அது “neurons ” களுக்கு supporting element ஆக மாறுகிறது.
இப்படி ஆச்சர்யமான ” அது ” எது என்று யூகிக்க முடிகிறதா ?
ஆம். ” அதுவே ” தான்.
Caffeine எனப்படும் கரும் சாபம் – தினசரி உபயோகித்தால், பெரும் சக்தி – எப்போதாவது உபயோகித்தால் – தூக்கத்திற்கும் உடல் செயல் திறனுக்கும் !
இது தெரிந்த பின் இன்று முதல் ஓர் முடிவு எடுக்கிறேன்.
ஆம். ” Black Coffee ” க்கும் Good Bye.
யோசிப்போம்.
பயணிப்போம் ஒரு Community யாக !





