நம்பிக்கை மனிதர்கள் : 006
#நம்பிக்கைமனிதர்கள் ; அபு
கொங்கு பொறியியல் கல்லூரியில் இருக்கிறது அந்த Incubator. அதென்ன incubator ? சொல்கிறேன்.
உங்களிடம் ஒரு idea இருக்கிறது. அதனுடன் Technology சேர்ந்தால் அந்த idea பலருக்கு உபயோகமாகும் செயலியாக / இயந்திரமாக மாறும் வாய்ப்புண்டு. ஆனால் அதை எப்படி செயலியாக / இயந்திரமாக மாற்றுவது ? எங்கே போவது ? யாரை கேட்பது ? அங்கே வருகிறது … TBI – KEC. Technology Business Incubator
உங்களிடம் ஒரு நல்ல Idea இருக்கிறது எனில் இங்கே செல்லலாம். அங்கிருந்து அதை அடுத்த நிலைக்கு Develop செய்ய அனைத்து உதவிகளையும் இந்த TBI – KEC அதன் வரைமுறைக்குள் செய்கிறது. ஆனால் idea உங்களுடையது என்பதால் இது உங்களின் குழந்தை. நீங்கள் அங்கேயே இருந்து உங்களின் குழந்தையை வளர்க்கலாம்.
அபு – ஒரு idea Maker. அவரின் idea அட்டகாசமான ஒன்று.
” பொதுவாக கண் பார்வையற்றவர்களுக்கு மிக challenging ஆன விஷயம் – எதிரே என்ன இருக்கிறது என்று அறிய முடியாமல் திணறுவது. ஆனால் .. மீத உணர்வுகளுடன் அந்த பொருள் என்னவாக இருக்கும் என்று Guess செய்வதில் Master ஆகி விடுவது சில வருடங்களில் நடக்கும். இந்த Guess செய்வதை reality யாக மாற்றும் idea தான் என்னுடையது. அதாவது நான் தயாரித்து இருக்கும் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், எதிரே இருக்கும் பொருளை இந்த கண்ணாடியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் Headphone வழியாக ஒலி வடிவில் இந்த கண்ணாடி சொல்லிவிடும். அதாவது Guessing ஐ விட .. reality யாகவே குரலில் கேட்டு பார்வையற்றவர் தன் நடையை தொடரலாம். ”
நான் அணிந்து நடந்தேன்.
” Window, Door ” என்று அது பேச ஆரம்பித்தது..அதாவது கண் இல்லாதவர்களுக்கு இது ஒலிக்கண் ணாக செயல்படும். என்ன ஒரு Idea ! மனிதர்களின் பெயரை பதிந்துவிட்டால் .. அவர்கள் வரும்போது அவர்களின் பெயரை உச்சரிக்கும் !
அபு விடம் கேட்டேன்.
” எப்படி இந்த வயதில் இப்படி யோசனை ? வேலைக்கு செல்லவில்லையா என்று கேட்கும் உம் வயது நண்பர்கள், பெற்றோர்கள் .. எப்படி தப்பிக்கிறீர்கள் ? ”
சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தார். ” பேசுவாங்க. நம்ம கவனம் இதை சரியாக கொண்டுவருவத்தில் மட்டுமே “என்று சிரித்தார்.
Kannan PS அவர்களின் உதவி இங்கே முக்கியமானது. என்னையும் சசியையும் அவர் அழைத்து சென்று அனைத்தை பற்றியும் விவரித்து சொன்னது மிக முக்கியமானது. அதற்கு நிறைய பொறுமை வேண்டும். அது கண்ணன் சாரிடம் நிறைய இருக்கிறது. உங்களிடம் அல்லது உங்களின் மகனிடம் மகளிடம் ஒரு idea இருந்தால் கண்ணன் அவர்களை சந்திக்கலாம். அது அடுத்த நிலைக்கு உங்களின் idea வை கொண்டு செல்லும்.
அபு வின் idea விற்கு பொருளாதார support ஐ TBI -KEC செய்கிறது.
இதுபோல நிறைய idea க்கள் அங்கே வலம் வருகின்றன.
பேசிவிட்டு வெளியே வரும்போது மனம் முழுக்க நம்பிக்கை. அரசாங்கம் idea க்களை அணைத்து ஆதரவு தருவதை விட .. என்ன பெரிய சாதனை இருக்க முடியும் ?
இந்த Incubator Concept இந்திய அளவில் 20 இருக்கிறது. ஆனால் அதில் தமிழ்நாட்டில் 05 இருக்கிறது. தமிழன் அப்படித்தான் .. எதிலும் முன்னணியில் இருப்பான் !
#TBIKEC
#அபு





