அவனும் அவளும் : 014
#அவனும்அவளும் ;
#மாதர்தம்மைஇழிவுசெய்யும் … ; 14
#அவன்களைபடியுங்கள் ;
சும்மா பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தால் கற்று விடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
கற்றல் என்பது நாம் நீங்கள் நான் நினைப்பது போல அவ்வளவு எளிதான ஒன்றல்ல !
ஒன்று படித்து தெரிந்து அதன்படி நிற்றல் – கற்றல்.
இன்னொன்று பட்டு தெரிந்து அதன்படி நிற்றல் – கற்றல்.
எது வேண்டுமோ எடுத்துக்கொள்வது உங்களின் விருப்பம் !
படித்தல் ஒன்று ;
சிலரை கவனிக்கிறேன். தேடல் இருப்பதாக போலியாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த போலிகளின் தேடல் post களில் நிறைய Followers மற்றும் ” உன்னை போல உண்டா ?” என்ற ஆஹா ஓஹோக்கள் வேறு. ஆன்மீகம் முதல் உதவி வரை இவர்களின் Post களில் .. இருக்கும் போலித்தனம் அப்பட்டமாக தெரியும். உதாரணம் ஒன்று சொல்லவா ?
” இவர்களுக்காக நான் உதவி இருக்கிறேன் ” என்று வரிசையாக post வரும். நீங்களும் ஆஹா ” வாழும் தெரேசா / இப்படியும் மனிதர் இருக்க முடியுமா ? ” என்று பின்னால் செல்வீர்கள். சில நாட்களில் தேடல் உங்களை நோக்கி வரும். நீங்களும் ” நல்லவர் தானே ” என்று பின்னால் செல்வீர்கள். வீட்டுக்கு வாங்களேன் – என்று ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பை மறுக்க முடியாமல் ஏற்பீர்கள். பின் வீட்டில் யாரும் இல்லை என்று தெரியவரும்.
யாரும் இல்லா வீட்டில் நாம் எதற்கு அழைக்கப்பட்டோம் ? என்று நீங்கள் உள்ளே கேட்பதற்குள் .. தேடல் உங்களை தொட முயற்சிக்கும். Conscious ஆக நீங்கள் இருந்தால் தப்பித்து விடலாம். இல்லை எனில் ? தேடலின் பொருள் புரியும். உதவி உதவி என்று நீங்கள் கேட்கும்போது .. அதே ” இவர்களுக்காக நான் உதவி இருக்கிறேன் ” என்று அடுத்த post யாரையோ குறிவைக்கும். ஆன்மீக Post இன்னும் ஒருபடி மேலே போகும். சொர்க்கம் நமக்குள்ளேயே இருக்கிறது என்பான். ஆனால் அவன் சொல்லும் சொர்க்கம் வேறு என்பது உங்களுக்கு காலம் சென்ற பின்னே தான் தெரியும்.
” நான் நல்லவன் – என்னை கவனியுங்கள் ” type messages தான் இவை. இதை புரியும் பெண்கள் தப்பிக்கலாம். இல்லை எனில் மாயவலை தான் !
ஒரு ஆண் தான் ” நல்லவன் ” என்று நிரூபிக்க ஏன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான் ? அதுவும் சமூக வலை தளங்களில் ? Simple Concept தான். புழுவை மாட்டிக்கொண்டு நீரில் மூழ்கும் தூண்டில் ” நல்லதாகவே “தெரியும் – அது தெரியா மீன்களுக்கு. மாட்டிக்கொண்ட பின் ? தூண்டிலின் வேக இழுவையில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். என்ன ஏது என்பதற்குள் … எல்லாம் முடியும். வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் வீட்டில் இருக்கும் கிடைக்கும் சுதந்திரமும் போகும். ஆகையால் அமைதியாய் இருப்பாள். அடுத்த தூண்டிலை அந்த ஆண் எழுப்பி இருப்பான்.
ஆனால் … இதெல்லாம் 2000 style.
இப்போதெல்லாம் பெண்கள் அப்படி இல்லை. ஆண் வசமாய் மாட்டுகிறான். பல ID க்களில் பெண் அவனை பற்றி அழகாக தெரிந்து கொள்கிறாள். அவனின் ஒரே ” நீங்கள் செம்ம ங்க ” வரி – நான்கு முகவரிகளில் விழும். அதில் மூன்று அவளுடைய போலி என்பது அவனுக்கு தெரியாது. அது தெரியாமலேயே அவன் அவளிடம் நடிப்பது அவளுக்கு புரியும். விலக்கிவிட்டு சிரித்து நகர்வாள்.
ஆம். நீங்கள் மிகச்சிறந்த நட்பு என்று கருதும் ( நான் உட்பட ) யாரிடமும் .. சில Fake Id க்களை வைத்து பேசுங்களேன். அட .. பேசித்தான் பாருங்களேன். கற்றல் அதிர்ச்சியாக ஆனால் அட்டகாசமாக இருக்கும். இப்படி எல்லாமும் மனிதர்கள் இருக்க முடியுமா என்கிற அளவிற்கு அவன் நடித்துக்கொண்டு இருப்பது புரியும்.
கண்ணியம் காப்பவன் Fake / Original எல்லாவற்றிலும் கண்ணியமாக இருப்பான். அது இல்லாதவனும் அப்படியே தான் இருப்பான். 😊😊😊 புரிகிறதா ? முதலாமாவனின் தேடல் வேறு ஏதோ. இரண்டாமவனின் தேடல் .. ஆம்… சாட்சாத் நீங்களே தான் !
பெண்களுக்கான இளகிய area அவனுக்கு அத்துப்படி.
சில இளகிய Areaக்கள் ;
உதவி – தான் அவன் முதல் இலக்கு. இதில் ஏதோ ஒரு பெண் சிக்குவாள் என்று அவன் நம்புகிறான்.
புகழ்ச்சி – இதை வைத்து முடிந்த அளவிற்கு நெருங்குவான். என்ன்றாலும் இது கொஞ்சம் old style இப்போது.
Care – அக்கறை – தன் அக்கா தங்கையிடம் இல்லாத அக்கறை உங்களின் மேல் வரும் பாருங்கள் அவனுக்கு !
தகவல் உதவி – என்ன கேட்டாலும் உடனே தகவல் கொடுத்து உதவுவான். பின் .. மெதுவாய் இளித்துக்கொண்டே பின்னே வருவான்.
தொலை தூரம் பயணித்து உங்களை பார்க்க வருதல் ;
நம்மை எல்லாம் பார்க்க யார் வருவார் – என்று நீங்கள் காத்திருப்பது அவனுக்கு புரியும். வருவான். மழை இடி மின்னல் மலை கடல் எல்லாம் கடந்து வந்ததாய் சொல்வான்.
.இப்படி இன்னும் நிறைய .. ( இருந்தால் பதியவும் ! )
கடைசியாக ஒரு வரி –
எல்லாம் கலந்தவன் தான் அவன் – என்ற கண்களை வைத்திருக்கும் பெண்கள் இதில் மாட்டுவது இல்லை.
வானத்தில் இருந்து வந்தவனோ – என்ற கண்களை வைத்திருக்கும் பெண்கள் மாட்டிக்கொள்வது நிஜம்.
கவனம் பெண்களே. நான் உட்பட – உங்களைப் பார்க்கலாமா ? என்று ஒரு அழைப்பு வந்தால் – பலமுறை யோசியுங்கள். வேண்டாம் என்றால் – முடியாது என்று சொல்லுங்கள். மீண்டும் அழைத்தால் – முடியாதுடா நாயே – என்றும் சொல்லலாம். கண்ணியம் கருதி – முடியாதுங்க இது படிய வாய்ப்பில்லைங்க என்றும் சிரிக்கலாம்.
அப்படி அவனை பார்க்காவிட்டால் குடியா மூழ்கிவிடும் ? ஆனால் .. பார்த்தால் குடி மூழ்கும் வாய்ப்பு உண்டு !
யோசிப்போம்.