மனங்களின் மறுபக்கம் : 013
மனங்களின் மறுபக்கம் ;
ஒரு தம்பதியர். இருவருக்கும் மன வருத்தம். மனைவி Counsellor ஐ நாடுகிறார். கணவன் நம்பிக்கைக்குரிய பெண் நட்பை தேர்ந்து எடுக்கிறார். மனம் விட்டு பேசுகிறார்கள். Counsellor இடம் பேசியது இன்று வரை அப்படியே ரகசியமாகவே இருக்கிறது. ஆக , கணவனின் பெயர் இன்னும் பத்திரமாகவே இருக்கிறது.
ஆனால் நம்பிக்கைக்குரிய பெண் நட்பிடம் அந்தக் கணவன் பேசியதை அந்த பெண் நட்பு record செய்கிறார்.
இங்கே தான் மனதின் இன்னொரு பக்கம் வருகிறது. அந்த பெண் நட்பு ” கணவர் ” பேசியதை – போவோர் வருவோரிடம் போட்டு காட்டி, ” இவர்கள் வீட்டில் பிரச்சினை ” என்று பேச ஆரம்பிக்கிறது. போவோர் வருவோருக்கும் ” இரத்த அவல், எழும்புத்துண்டு கிடைத்த ” சந்தோஷத்தில் .. அதை ஊரெல்லாம் பேச ஆரம்பிக்கிறார்கள். இது என்ன மனநிலை ?
கொஞ்சம் கவனிப்போம்.
பெண் நட்பிற்கு இந்த குடும்பம் நன்றாக வர வேண்டும் எனில் என்ன செய்திருக்க வேண்டும் ?
1. கணவர் மனைவி இருவரையும் அவர்கள் விரும்பினால் பேச அழைத்து, புரிதலை அதிகப்படுத்த முயற்சிக்கலாம்.
2. கணவரிடம் மனைவியை / மனைவியிடம் கணவரை பற்றிய புரிதலை அதிகப்படுத்த முயற்சிக்கலாம். ( கேட்பது கேட்காதது கணவனின் / மனைவியின் சுதந்திரம் ! சொல்ல மட்டுமே நமக்கு உரிமை …இல்லையா ? )
3. கணவர் மனைவி சண்டைகள் காலப்போக்கில் சரியாகும் என்பதை உணர்ந்து விலகி நிற்கலாம். 5 வருடம் கழித்து சேர்ந்த தம்பதிகளை கவனித்து இருக்கிறேன். அது அவர்களின் வாழ்க்கையின் சுதந்திரம்.
4. குழந்தைகள் மூலம் சில புரிதல்களை உண்டாக்க முயற்சிக்கலாம்.
ஆனால் இந்த பெண் நட்பு என்ன செய்கிறது ?
1. கணவனின் கஷ்டத்தை சொல்வதாக நினைத்து மனைவியின் பெயரை ஊரெல்லாம் கெடுத்துக்கொண்டு இருக்கிறது.
2. மனைவிக்கு நல்லது செய்வதாக நினைத்து கணவன் கடின நேரங்களில் பேசியவற்றை record செய்து ஒலி பரப்புகிறது. ( இதையும் உட்கார்ந்து காது கொடுத்து கேட்பவனை கேட்பவளை என்னவென்று சொல்வீர்கள் ? இது என்ன விதமான porn மன நிலை ? )
( ஆச்சர்யம் என்னவெனில் இந்த பெண் நட்பிற்கு இரண்டு பெண் குழந்தைகள். நாளை அவர்களுக்கு திருமணம் ஆகி, அவர்களின் வாழ்வில் பிரச்சினை வந்து, ( அப்படி வரவேண்டாம். அவர்கள் நன்றாக வாழட்டும் ) குழந்தைகளின் கணவன் கடின நேரத்தில் பேசினால் …அதையும் Record செய்து … ஊரெல்லாம் கேட்க சொல்ல முடியுமா ? தன் பிள்ளை என்றால் இரத்தமா ? மற்றவர் வாழ்க்கை என்றால் தக்காளி சட்னியா ? )
3. இன்னும் கொஞ்சம் ஆச்சர்யமான தகவல் சொல்லட்டுமா ? இதெல்லாம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகி அந்த கணவன் மனைவி இப்போது சிறப்பாக வாழ்கிறார்கள். அவர்களின் வீட்டில் அடுத்த தலைமுறைக்கு திருமண வேலைகள் ஆரம்பிக்கின்றன. ஆனால் இந்த பெண் நட்பு FM வேலைகளை .. … சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது.
ஆக .. இங்கே புரிய வேண்டிய சில விஷயங்கள் ;
கணவன் மனைவி உறவில் – கடின நேரங்களில் – கூடுமானவரை – Personal தகவல்களை வெளியே சொல்ல வேண்டியது இல்லை.
கணவன் மனைவி கடின பக்கங்களை வாழ்க்கை முழுவதும் பாதுகாக்க முடியும் எனில் காது கொடுத்து கேட்க வேண்டும். இல்லை எனில் .. ***** கொண்டு வெளியேறலாம்.
கணவன் மனைவி உறவில் கடின பக்கங்கள் யதார்த்தம் என்று புரிய வேண்டும். இது காலப்போக்கில் சரியாகும். அவ்வளவே. ( சரியாகவில்லை எனில் முடிவை அப்போது எடுத்துக்கொள்வோம் என்கிற பக்குவமும் அவர்கள் இருவருக்கும் வேண்டும். பேசுவதை தவிர்க்க வேண்டும். )
கணவன் மனைவி உறவில் up and down பக்கங்கள் வரும். அதை அவர்கள் சரி செய்வார்கள். அல்லது சரி செய்ய இயலவில்லை, பிரிவதே நல்லது.. என்று பிரிவார்கள். இது ஒவ்வொரு தம்பதிக்கும் நடக்கும். (இதை வெளியே சொல்லும் பெண் நட்பிற்கும் இது நடக்கலாம் ! )
இதை poster ஒட்டும் வேலைகளை செய்பவர்கள் .. மனிதப் பிறவிகளில் வர வாய்ப்பில்லை. நாளை கணவன் மனைவி நன்றாக வந்தாலும் இவர்களுக்கு அந்த ” audio ” உள்ளே கேட்டுக்கொண்டே இருக்கும்.
****
Just இணைந்துவிட்டு எழுவது திருமணம் அல்ல. காலத்தால் சரி செய்ய முடிந்தால்… சரி செய்து வாழ்வதும் திருமணமே !