Slogging Songs : 019
#SloggingSongs ;
(இன்று எம் Personal பாடல். ஒரே ஒரு நாள் காத்திருக்கவும். வழக்கமான பாடல்களுக்கு வருகிறேன். )
ஒரு பாடல் என் இயல்பை ஒட்டி வந்தால் இந்த பாடல் எனக்கு.பிடித்து போவதில் வியப்பில்லை.
” ஞானத்தை பாதித்து மானத்தை சோதித்தால்
நான் என்ன செய்வேனடி ? ”
ஞானத்தை உலகம் வேறு ஏதாவது tone இல் புரிந்துகொண்டு React செய்தால் நான் React செய்ய வேண்டி வருகிறது. கொஞ்சம் Pro Approach இல் என் reaction இருக்கும். எலும்புத்துண்டு, நாய், மிச்சம், சொச்சம் … என்றெல்லாம் எம் பதில் இருக்காது. ஆனால் .. மானம் கப்பலேறும் நடவடிக்கைகள் உறுதி.
” நான் உண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு
என்றே நான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக தாளாத கோபத்தில்
நான் வேங்கை ஆனேனடி ”
“நான் பாட்டுக்கு செவனென்னு போய்க்கிட்டிருக்கேன் …. ” இது என் அருகாமையில் இருப்பவர்களுக்கு நான் சிரித்து சொல்லும் வாசகம். மேலே உள்ள வரிகள் அப்படியே இங்கே வரும். ” நீங்க நல்லவரா ? கெட்டவரா ? யோகியா ? ஜென்னா ? சராசரியா ? என்று கேட்பவர்களுக்கு .. ” அது பார்ப்பவரை பொறுத்தது ” என்பதே என் பதில்.
ஒரு zen ஐ புரிய உனக்கு zen மனநிலை வேண்டும். நாய், எழும்புத்தண்டு பற்றி புரிய என்ன மனநிலை வேண்டும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நான் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
” என் நெஞ்சத்தில் வஞ்சங்கள்
இல்லாதவன்
வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன் ”
பொதுவாகவே நான் வஞ்சங்களை வைத்துக்கொள்வதில்லை. கடக்கிறேன். ஆனால் ஒரு சரியான Offence ஆடிவிட்டே கடப்பேன். அடுத்த வரியில் இந்த offence க்கு காரணம் இருக்கிறது.
” கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ”
ஆகாயமாக வாழும்போது அது பொதுவாக நம்மை தொந்தரவு செய்யாது என்று நினைக்கலாம். ஆகாயம் நோக்கி கல் ஏறிபவனுக்கு அது எங்கே வந்து விழும் என்று தெரிய வேண்டும். அதே போல ஆகாயம் அவ்வபோது இடி மழை மின்னல் என்று தான் சொல்ல விரும்புவதை சொல்லும். வெறும் மழை தூறல் … பார்த்து.. .. ஆகாயத்தை மதிப்பிடுபவன் – மனிதன் அல்ல !
” எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்பார்கள்
உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இதுபோல ஆனேனடா ”
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக அதை பார்த்து சிரித்து கடக்கிறேன். நான் பேசியது தவறு என்று இரண்டு வருடம் கழித்து என்னிடம் மன்னிப்பு கேட்ட மனிதனும் உண்டு. தான் பேசியதே சரி என்று வீம்பாய் திரியும் மனிதனும் உண்டு. இரண்டும் என்னை பாதிப்பதில்லை. சிரித்தே கடக்கிறேன். ஒரே ஒரு வரி பதில் தான் அப்படி மனிதர்களுக்கு …
” ஒரு நல்ல நண்பனை இழக்கிறாய். காலம் உனக்கு பதில் சொல்லும்”