Training Diaries – 001
#TrainingDiaries – Page 001
Zenlp Academy
” சார் .. மற்றவங்கள பத்தியே யோசிக்கிறேன். ஏன் இப்படி ? ”
” பதில் கொஞ்சம் Harsh ஆ இருக்கும் பரவாயில்லையா ? ”
” சொல்லுங்க சார் . அப்படி சொல்ல ஆள் இல்லாமத் தான் கொஞ்சம் வீணா போயிட்டேன் ”
” இலக்கு என்று எதுவும் இல்லை உங்களுக்கு. அப்படியே இருந்தாலும் அதில் தெளிவில்லை. அப்படியே தெளிவு இருந்தாலும் அதை அடையும் திட்டம் எதுவும் இல்லை ”
” இல்லையே சார். திட்டமெல்லாம் இருக்கே சார் ”
” அப்படியே இருந்தாலும் … உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்படி எனில் .. இலக்கின் உயரம் மிக குறைவு. இலக்கின் உயரத்தை அதிகப்படுத்துங்க சார் ”
அமைதியாக இருந்தார்.
” இவ்வளவையும் கடந்து மற்றவர்களை பற்றி யோசித்தால், பேசினால், Post போட்டுகொண்டு இருந்தால், அவர்கள் இல்லாத நேரங்களில், யாரும் கேள்வி கேட்காமல்… அவர்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தால் . .. உங்களுக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை என்று அர்த்தம். சுறுக்கமாக சொன்னால் .. பொறுப்பில்லை உங்களுக்கு ! ”
சிரித்தார். இருவரும் சிரித்தோம்.
( ZENLP Training கில் நான் கடந்து வந்த பல அனுபவங்களை இங்கே பகிர்கிறேன். நட்பில் இருப்பவர்களுக்கு இங்கும், நட்பில் இல்லாதர்வாகளுக்கு sharing மூலமாகவும் .. எங்கோ .. யாரோ ஒருவருக்கு அல்லது பலருக்கு உதவலாம் ! )