Slogging Songs : 20
#sloggingSongs ;
” விரலின் நகம் வருடும் என்று
Steel string guitar வாடாதா ?
இரவில் தினம் மடியில் இந்த
Dolphin இனம் ஆடாதா ? ”
பிரபுதேவா ரம்பா வின் இந்த பாடலில் ஒரு துள்ளல் ஆட்டம் இருக்கும். Dance Master Romance என்பது அந்த மென் ஆட்டத்திலேயே தெரியும். வெண்ணிலவே வெண்ணிலவே அதற்கு முழு sample.
நகம் வருட காத்திருக்கும் Guitar ! என்ன ஒரு அழகான கற்பனை !!
” Marriage ஆயாச்சு .. வில்லன் தான் போயாச்சு. மெத்தை எல்லாம் duet தான் ”
மெத்தை எத்தனை பேருக்கு duet ஆக இருக்கிறது என்று தெரியவில்லை. வந்தோம் சென்றோம் என்பது மெத்தை அல்ல. மெத்தை ஒரு தனி உலகம். இருவருக்கு மட்டுமே கேட்கும் மென் பேச்சு கொண்ட இந்த உலகில் Romance வேறு நிலை. புரிதல் இங்கே மௌனமாக பரிமாற்றம் கொள்ளும். அப்படி நடக்கவில்லை எனில் மெத்தை just ஒரு வேறு எதற்கோவான களம் மட்டுமே !
” இலேசா நான் தீண்ட லேசர் போல் நீ தீண்ட நெஞ்சுக்குள் தான் ஆடினேன் ”
தீண்டல் என்னவோ ஒன்று அல்ல. அது விரல் வழி பரிமாறும் மௌன இயக்கம். ஒரு தீண்டலில் உணர்வை பரிமாறும் அழகு இந்த உலகின் எழுத முடியா கவிதை.
நெஞ்சுக்குள் ஆடும் Dance தான் உலகத்தின் best dance. அதை காண முடிந்த ஒரே நபர் நாம் மட்டுமே. மற்றவை just expression மட்டுமே.
கடைசியாக எப்போது நெஞ்சுக்குள் Dance ஆடினீர்கள் ?
என்ன பாடல் என்று கணிக்க முடிகிறதா ?
Video வில் பாருங்கள். ஒரு துள்ளல் வரும் உங்களிடம்.