Training Diaries : 008
#TrainingDiaries : 008
” என் வேலைகளை தள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறேன். என்ன செய்வது ? ”
பேசியவரை கவனிக்கிறேன். இள வயது.
” உங்களுக்கு இலக்குகள் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன் ”
என்று நான் சொல்ல உடனடியாக பதில் வந்தது அவரிடம் இருந்து ..
” இல்லையே. நிறைய இலக்குகள் வைத்திருக்கிறேன். அவற்றை அடையவும் செய்கிறேனே ! ”
நான் சிரித்தேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
” இலக்குகளில் நிறைய வகைகள் உண்டு. மூன்று வகையினை இங்கே சொல்கிறேன். பார்ப்போம் நீங்கள் எந்த வகையில் வருகிறீர்கள் என்று …
1. Goals in Comfort Zones.
2. Goals in Challenging Zones.
3. Goals in Demanding Zones.
****
1. Goals in Comfort Zones.
இது கொஞ்சம் ஆச்சரியம் நிறைந்த zone. இலக்குகளை அடைவோம். ஆனால் அடைந்தாலும் அடையாவிட்டாலும் ok மனநிலை இருக்கும். ( அப்படி இருந்தால் அது இலக்கா என்ன ? ). இலக்குகளை ரசித்து செய்து அடைவது வேறு. அது 3 ஆவது zone இலும் செய்ய முடியும். இலக்குகளை மிக எளிதாக வைத்து ரசிப்பது வேறு. இன்று நான் 4 இட்லி சாப்பிடுவேன் என்பதெல்லாம் இலக்கா என்ன ?
இந்த zone இல் இருந்துகொண்டு இலக்கை அடைவதாக சொல்வது வெறும் கற்பனை. அதாவது இது தினசரி செய்வதை இலக்கு என்று நிர்ணயம் செய்வது. அவ்வளவே.
2. Goals in Challenging Zones.
இங்கே இலக்குகள் நம்மை சவாலுக்கு அழைக்கும். நம் புதிய திறமைகள் வெளிவரும் களம் இது. இங்கே நம்மில் பலர் அவர்களின் இன்னொரு முகத்தினை கண்டுபிடிப்பார்கள். இந்த zone இல் இல்லாமல் இலக்குகளை அடைய வாய்ப்பில்லை. வாய்ப்பே இல்லை.
100 நாட்கள் ஒரு விஷயம் செய்கிறேன் என்பதெல்லாம் இங்கே தான்.
3. Goals in Demanding Zones.
இதுதான் பெரும் களம். இலக்குகள் நம்மை தூங்க விடாது. இங்கே இலக்குகளை நாம் அடைய முயற்சிக்க முயற்சிக்க அவை இன்னொரு உயரத்திலிருந்து நம்மை கிண்டலாக பார்க்கும். ” அவ்வளவு எளிதல்ல இது. ” என்று உள்ளே ஒரு குரல் கேட்கும். ஆனால் அதே குரல் ” முடியாதா என்ன ? ” என்று நம்மை சீண்டும். இந்த zone இல் ஒரு இலக்கை அடைந்தால்… நாம் இலக்கை அடைந்ததாக சொல்லிக்கொள்ளலாம்.
இங்கும் 100 நாட்கள் விஷயம் இருக்கும். ஆனால் .. 20 நாளிலேயே விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்று தோன்றும். அதுதான் demand. அங்கே தான் இலக்கை தொட வேண்டும். முடியாத ஒன்று இங்கே நடக்கும். Kanyakumari முதல் Kashmir வரை ஒரு பெண் ஒற்றை ஆளாக Bike இல் கடந்தது இந்தியாவில் பெரிய விஷயம். அந்த மாதிரி benchmark சாதனைகள் நிகழும் களம் இது. நீங்கள் தான் முதலில் இதை செய்தீர்கள் என்று உலகம் பாராட்டும் களமும் இதுவே. வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்தக் களத்தை தொட்டுவிட வேண்டும்.
இதில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை ”
சொல்லிவிட்டு அவரை பார்த்தேன்.
அமைதியாக யோசனையுடன் இருந்த அவர் சொன்னார் ..
” நிச்சயமாக 1 ஆம் zone இல் தான். இப்போது புரிகிறது. ஏன் தள்ளி போடுகிறேன் என்று … ”
இருவரும் சிரித்தோம்.
” நினைக்கவே முடியாத, வாய்ப்பே இல்லாத, நம்பவே முடியாத நல்ல விடயம் ஒன்றை செய்ய முடியவில்லை எனில் … இந்த அற்புதம் நிறைந்த உடலை வைத்து என்ன செய்யப்போகிறோம் ? உண்பதற்கும் கழிப்பதற்குமா இந்த அற்புத உடல் ? ”
ஆம் என்று தலை அசைத்தார்.
” இடம் ஒன்று வாங்கி போட்டு அப்படியே இருக்கிறது. அடுத்த வருடத்திற்குள் ஒரு பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்பது என்னுடைய இலக்கு. என் பொருளாதார சூழ்நிலையில் இது அவ்வளவு எளிதல்ல. நான் இன்னும் வேறு நிலைகளிலும் உழைத்து பொருள் ஈட்டவேண்டும். மனைவியின் கனவு இது. நன்றி Jay. உங்களை முன்னமே சந்தித்திருக்க வேண்டும் ”
அகமதாபாத் நகருக்கு அருகே அவர் பள்ளிக்கூடம் கட்டிவிட்டார். சிறப்பாக செயல்படும் அது அவரின் Demanding zone இல் இருந்து வெளிவந்த benchmark !
அதெல்லாம் இருக்கட்டும்.
உங்களின் Benchmark என்ன ?
நீங்கள் எந்த zone இல் இருக்கிறீர்கள் ?