Training Diaries : 010
#Training Diaries ;
” மற்றவர்களிடம் இருந்து Recognition எதிர்பார்க்கிறேன். இது தவறா ? ”
கேட்ட பெண்மணிக்கு 20 plus இருக்கலாம்.
” மற்றவர்கள் ஏன் உங்களை Recognize செய்ய வேண்டும் ? ”
” ஏன் கூடாது ? ”
கேள்வியை ரசித்தேன். ஆனாலும் சரியான கேள்வி அல்ல.
” இந்த உலகம் மாறக்கூடியது. ஆக அதே கதை தான் மற்றவர்களுக்கும். ஒன்றிரண்டு பேர் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனாலும் காலம் தான் எஜமான். அப்படி மாறும்போது உங்களுக்கு அவர்கள் கொடுத்த Recognition ஐ எப்படி அப்படியே திரும்ப கொடுக்க முடியும் ? ”
” ஏன் கொடுக்க கூடாது ? ”
அவரின் கேள்வியின் pattern புரிந்தது. இப்போது நான் கேட்க வேண்டிய தருணம்.
” நீங்கள் கடைசியாக Bye சொன்ன மனிதர் யார் ? ”
பெயர் சொன்னார்.
” ஏன் ? ”
கொஞ்சம் யோசித்தார். ” அவர் முன் மாதிரி இல்லை ”
நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.
” சரி தான். காலம் மாறும்போது காட்சிகளும் மாறும் ”
சிறிது நேர அமைதிக்கு பின் கேட்டார்.
” அப்போ யாரையும் நம்பக்கூடாதா ? ”
” இல்லை. நம்பலாம். அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் Recognition ஐயும் நம்பலாம். ஆனால் ஒரு ( பின் வாக்கியதுடன் ). ”
” அது என்ன ? ”
” அவர் நல்லவர் தான் – till now -இப்போது வரை ! நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. எனக்கு அவர் கொடுத்த Recognition நல்ல ஒன்று தான் – இதுவரை – till now ! ”
கொஞ்சம் யோசித்து சொன்னார்.
” சரிதான். ஆனால் நம்பிக்கையின்மை யாக இல்லையா ? சந்தேகமாகவே இருக்குமே யாரை பார்த்தாலும் ?
நான் சிரித்தேன்.
” அது எப்படி ? உள்ளதை சொல்லிவிட்டு நகர்வதில் ஏன் சந்தேகம் வருகிறது ? இன்னும் சரியாக சொன்னால் இது ஒரு எச்சரிக்கை உணர்வு கூட இல்லை. Just உள்ளதை சொல்வது. அவ்வளவே. Till Now ஒரு யதார்த்த களம். ”
அமைதியாக இருந்தார்.
” என் நண்பனை போல உண்டா என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போது till now சேர்த்தால் .. எல்லாம் மாறுகிறது ”
இருவரும் சிரித்தோம்.
” எனக்கு கடைசியாக ஒரு Award கொடுத்தார்கள். சிறந்த பேச்சாளர் என்று ”
அவர் முடிக்கும்போது இருவரும் ஒரே குரலில் தலையை ஆமோதித்து சொன்னோம்.
“Till now – இந்த நிமிடம் வரை ”
@Jayasekaran Zen