நகரும் புல்வெளி : 042
#நகரும்புல்வெளி ;
ஒரு பெரும் மரம். அதன் மீது நெடு காலமாய் விழுந்த ஈர மழையால், உயிர் பெற்ற பாசி. பாசி கொடுத்த தளத்தின் வேரில் வளர்ந்த செடி. அதன் இலை. சற்று முன் பெயத மழையின் ஒற்றை துளி ஒன்று .. அந்த இலையுடன் செய்து கொண்டிருந்த உறவாடலுடன் ஆரம்பமாகிறது இன்றைய நாள் – அவைகட்கு மட்டுமல்ல. எனக்கும் தான் !
பொதுவாகவே பசும் மரங்கள், பெரும் மழை, நீரோட்ட களம், யாருமற்ற புல்வெளி, இவற்றிற்கு நடுவே ஓர் ஒற்றை பாதை கண்டால் …மனம் துள்ளி குதிக்கிறது – வெளி உடலை தொந்தரவு செய்யாமல் ! உண்மையான ஆனந்தம் அப்படித்தான். வெளி உடலை தொந்தரவு செய்யாது !
அந்த மரத்திற்கு 100 வயது இருக்க கூடும். அந்த செடிக்கு வயது சில வாரங்கள் /மாதங்கள் இருக்க கூடும். Senior மரம் Junior செடிக்கும் ஒரு micro inch இடம் கொடுத்து தன் வளர்வை தொடர்கிறது. பெரிய மனிதர்கள் (மனத்துக்காரர்கள் ) அப்படித்தான். ஒரு Micro inch சினை அடுத்த தலைமுறைக்கு.அவர்களால் அளிக்காமல் இருக்க முடியாது. மரத்திற்கும் பெரும் மனம் உண்டு !
ஈர நிலம் காலணி கடந்து உள்ளங்கால் தொடுகிறது. சில்லென்ற அந்த ஈரம் காலில் ஆரம்பித்து உள்ளத்தில் நிறைகிறது – யாருக்கும் தெரியாமல். ஈரம் அப்படித்தான். தன் வருகையை சத்தமின்றி குளிர்வாய் உணர்த்தும். பின் இருந்த தடம் அற்று மறைந்துபோகும். சில மனிதர்களும் அப்படித்தான். ஈர் மனிதர்கள் அவர்கள் !
பெரும் மரத்திற்கு கீழ் நின்றபோது ..
” நான் காலம் பார்த்தவன். கவலை அற்று முன்னேறு ” என்று சொல்லாத மரம் – என் ஆழ்குரல் மூலம் என்னுள் சொன்னது. ஆம். மரங்கள் என்றால் நம்பிக்கைகள் தானே ?
JAY.