Training Diaries : 011
#TrainingDiaries : 011
#zenlpacademy
💐💐💐
” அம்மா எனக்கு இட்லி போதும் ”
சுபாஷ் சொல்ல,
” எனக்கு தோசை போதும் ”
அக்கா சொல்ல …இருவருக்கும் order செய்தாகிவிட்டது. தோசையும் இட்லியும் வந்தது. சுபாஷ் சாப்பிட்டு முடிக்க, அக்காவின் தோசை கொஞ்சம் pending.
” அம்மா எனக்கு போதும் ”
” pack பண்ணிக்கலாம் ” என்று அம்மா சொல்ல ..
” ஏன் இவர் சாப்பிட மாட்டாரா ?” என்று நான் சுபாஷ் பார்த்து கேட்க …
” எனக்கு தோசை பிடிக்காது ” என்று சுபாஷ் சிரித்தார்.
கொஞ்சம் யோசித்த பின் ..
” அதுக்கு பேரு தோசையே இல்லை ” என்று நான் சொல்ல … சுபாஷ் shock ஆக, அக்கா சிரிக்க …
” அப்புறம் என்ன பேர் ? ”
” அதுக்கு பேர் Slim Idli. ” என்று நான் ஒரு pause கொடுக்க .. சுபாஷ் அதிசயமாக பார்த்தார்.
” ஆமா. இட்லி எப்படி இருக்கும் ? ” என்று நான் கேட்க …
” குண்டா இருக்கும் ”
” அதே இட்லி யை slim மா ஊற்றினால் அதுதான் இது . நீ சாப்பிட்டு பாரேன் ” நான் சொல்ல …சுபாஷ் தட்டை இழுக்க ஆரம்பித்தார்.
சாப்பிட ஆரம்பித்தவுடன் ” நன்னாருக்கா ? ” என்று நான் கேட்க … கொஞ்ச நேரம் முன் வேண்டாம் என்றவர் இப்போது சாப்பிட்டு கொண்டிருந்தார்.
ஆம்.
பிடிக்காத விஷயங்களின் பிடித்த Version நமக்கு எப்பவுமே அழகு தான். Cricket உங்களுக்கு பிடிக்கலாம். நீங்கள் Sachin ஆக Kohli ஆக வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் தொழிலில் நீங்கள் Sachin ஆக முடியும். Kohli ஆக முடியும். அலுவலகத்தில் உங்கள் team க்கு நீங்கள் Dhoni ஆக முடியும்.
கவிதை உங்களுக்கு பிடிக்கலாம். வியாபாரத்தில் எப்படி எங்கே கவிதை என்று யோசிப்பதற்கு பதில் … tag lines ஐ கவிதையாக எழுதி பழகலாம்.
வரவு செலவு கணக்கில் நீங்கள் புலி யாக இருக்கலாம். அதனை தினம் உண்ணும் உணவு / எரிக்கும் சக்தியில் கொண்டு வந்தால் fitness மிகவும் எளிது.
ஆம். பிடிக்காத விஷயங்களை பிடித்த version இல் பார்ப்பது போல ஒரு Attraction ஏதுமில்லை.
சுபாஷ் அதற்குள் தோசையை முடித்திருந்தார். ( நாளை அவருக்கு மீண்டும் தோசை பிடிக்காது போகலாம். ஆனால் அதற்கு வேறு காரணங்கள் இருக்க கூடும் 😊😊 )
” அப்போ இதற்கு பேர் என்ன ? ” என்று காலியாக இருந்த IDLI PLATE ஐ கை காட்டி அக்காவிடம் கேட்க ..
” குண்டு தோசை ” என்று அக்கா சொல்ல …
அனைவரும் சிரித்தோம்.
புகைப்படத்தில் சுபாஷ் என்னுடன் !
Gayathri Sivakumar
Training தான் எவ்வளவு அழகானது !?