Jerspectives : 004
#100புகைப்படங்கள் ; 002
#jerspectives
💐💐💐
பொதுவாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது ஏன் சொர்க்கம் என்பது எங்கோ இருப்பதாய் ஒரு சிந்தனை ? ஏன் அது நாம் வாழும் பூமியாக இருக்க கூடாதா ? மற்ற கோள்களில் ஒரு வேளை மனிதர்கள் வசித்துக்கொண்டு இருந்தால் … அவர்களுக்கு பூமி தான் சொர்க்கம் என்று சொல்லப்பட்டு கொண்டு இருக்குமோ ?
இயற்கையுடன் நான் கலக்கும் நேரங்களில் பூமி தான் சொர்க்கம் என்பதில் மிக தீர்க்கமாவேன். இந்த புகைப்படம் ஊட்டியில் எடுக்கப்பட்டது. ஒரு ஓவியம் கூட செய்யமுடியாத வண்ணக் கலவையில் உருவாகிய இந்தக் காட்சியை just பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதை தவிர வேறொன்றும் அறியோம் இயற்கையே என்று உள்ளே சொல்லிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன்.
நீல வான் / வெள்ளை மேகம் combo போல ( அறிவியல் காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ) ஒரு combo இன்னும் எனக்கு தெரியவில்லை. The best combo என்று இதைத்தான் சொல்வேன். அதிலும் ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது இவை இரண்டும் simply magical.
மண்ணும் பச்சை மரங்களும் … தன் ஓவியத்தை வரைந்து முடித்த இயற்கை போனால் போகட்டும் என்று ஆங்காங்கே புள்ளி வைத்தது போல வைக்கப்பட்ட பெரும் மரங்கள் … ! என்ன ஒரு காட்சி. அதிகாலையில் நடையில் நான் கண்ட காட்சி இது. வழக்கம்போல இதை எல்லாம் கவனிக்காது மக்கள் சம்பாதிக்க சென்று கொண்டே இருந்தனர். அவர்களுக்கு என்ன ? பணமே சொர்க்கம் ! வசதிகள் தான் சொர்க்க வாயில் ! அவர்களில் இன்னும் சிலர் variety என்று மதுவையும் மாதுவையும் சொர்க்கம் என்று மூட நம்பிக்கையுடன் திரிவர்.
எனக்கு சொர்க்கம் இயற்கையே. இது ஒரு பெரும் போதை. எல்லையில்லா என்ற ஒற்றை வார்த்தைக்கு இவ்வுலகில் ஈடு கொடுக்கும் ஒரே காட்சி இயற்கையின் காட்சி மட்டுமே. எல்லையில்லா ஆனந்தம் அருவியின் ஒலி தான். எல்லையில்லா கிளர்ச்சி மழையின் தொடல் தான். எல்லையில்லா சுவை மண்ணின் மணம் தான் ! எல்லையில்லா இன்னொரு சுவை மழையின் வியர்வை தொடும் எம் உதடுகளின் எச்சில் தான் !
இங்கே சொர்க்கம் வைத்து வான் சொர்க்கம் தேடும் அற்ப மனிதர்களை கடந்து உரக்க சொல்வேன்
” எம் பூமியே சொர்க்கம் ” !