Jerspectives : 015
#100Photographs ; 013
#jerspectives
💐💐💐
மூன்று மனிதர்கள். மரம் ஏறுபவர்கள். Gym க்கு எல்லாம் சென்றதே இல்லை. 6 Packs என்று யோசித்தது இல்லை. அதற்க்கான work out எல்லாம் செய்தது இல்லை. ஆனாலும் அந்த Packs மிக இயல்பாக வந்திருக்கிறது அவர்களுக்கு. மூன்று காரணங்கள் மட்டுமே அதற்கு ! உழைப்பு. உழைப்பு. உழைப்பு. வயலில், மூட்டை தூக்கும் தொழிலில், மரம் ஏறுதலில் .. மனிதர்களை கவனித்து இருக்கிறீர்களா ? இப்படியான packs அங்கே இயல்பாக இருக்கும் !
செயற்கை உலகில் காலடி எடுத்து வைத்தபின் தான் நமக்கு செயற்கை உடற்பயிற்சி களங்கள் தேவைப்பட்டன. இயல்பான வாழ்வில் 20 Kms வரை நாம் ஒவ்வொரு நாளும் நடந்த போது இவையெல்லாம் யதார்த்தமாய் நமக்கு கிடைத்தவைகள். ஆதி மனிதன் எந்த Gym மில் உடற்பயிற்சி செய்தான் ?
மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் தான் இவர்களை சந்தித்தேன். என்ன ஒரு பார்வை நேர்மை அவர்களிடம் ? பேச்சில் ஒரு ” வெட்டு ஒன்று துண்டு இரண்டு ” என்கிற வேகமும், துல்லியியமும் ! பொதுவாகவே இயல்பு வாழ்வில் இவை அழகாய் கிடைத்துவிடுகின்றன. இயல்பு வாழ்வை விட்டு வெளியே சென்ற பின் தான் .. இந்த குணாதிசயங்கள் நம்மை விட்டு அகல்கின்றன. நேர்கொண்ட பார்வை எல்லாம் அங்கே தேவைப்படுகிறது !
என்ன யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறதா ? ஆம். யோசிப்போம்.