நான் எனப்படும் நான் : 017
#நான்எனப்படும்நான் ;
இங்கே இப்போது இக்கணம் தாண்டித்தான் நமக்கு அனைத்து பிரச்சினைகளும் வருகிறது. கடந்த, எதிர்வரும் கணங்கள் இன்னும் வரவில்லை அல்லது இனி வரப்போவதில்லை என்று புரிந்தவர்களால் இந்தக் கணம் கொண்டாடப்படுகிறது. மற்றவர்களால் ?
💐💐
ஒரு யோகி யிடம் கேட்ட கேள்வி –
” பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்ய ? ”
” பழைய நினைவுகளை நினைக்கும் இந்த நினைவு எப்போது வருகிறது ? ”
கேட்டவர் கொஞ்சம் யோசித்து சொன்னார்.
” இப்போது ”
யோகி சிரித்துக்கொண்டே சொன்னார்.
” அப்படியானால் இந்த நொடியில் அல்லவா வாழ்கிறீர்கள் ?. நீங்கள் எங்கே கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள் ? ”
இந்தக் கதை நமக்கு சொல்லும் விடயங்கள் மிக ஆழமானவை. அசை போட்டுப்பார்த்தால் உங்களுக்கு புரியவரும்.
💐💐
இந்த நொடியில் எனக்கு எதிரிகளோ நண்பர்களோ இருக்க வாய்ப்பில்லை. கடந்த நொடியில் எதிர் வரும் நொடியில் தான் எதிரிகளும் நண்பர்களும் வரக்கூடும். அப்படி பார்த்தால் … இந்த நொடி எனக்கும் இயற்கைக்குமானது. இயற்கையின் ஒரு micro பகுதியாக நான் உணர்வதை விட ஒரு ” இந்தக் கணம் ” உண்டா இந்த உலகில் ?
💐💐
யோசிப்போம்.