நான் எனப்படும் நான் : 019
#நான்எனப்படும்நான் ;
சில நேரங்களில் நமக்கு தோன்றும் – நல்லதை செய்வதால் நாம் என்னவாக பார்க்கப்படுகிறோம் ?
* பிழைக்க தெரியாதவர்கள்
* ஏமாளி
* சிறப்பாக வாழ்கிறார்கள்
* தையிரியம் நிறைந்தவர்கள்
முன்னவை இரண்டும் negative பார்வையில். பின்னது positive பார்வையில்.
என் தனிப்பட்ட வாழ்வில் பொதுவாக நான் ” அவர்கள் ” என்னை எப்படி பார்க்கிறார்கள் என்று யோசிப்பதில்லை. உலகத்திற்கு ஒரு மனம் இருக்க வாய்ப்பில்லை. தினம் ஒரு மனம் வைத்திருக்கும் உலகம் தினம் ஏதாவது நினைக்கும். அதற்காக நாம் யோசிப்பதற்கு பதில் நாம் வேறு வாழ்வை நோக்கி நகரலாம். என் பார்வையில் நான் என்னை பற்றி என்ன நினைக்கிறேன் என்பதே எனக்கு மிக முக்கியம். நல்லதை செய்துவிட்டு அனைத்தையும் எதிர்கொள்ள எமக்கு தையிரியம் அதிகம் என்றே எனக்கு தோன்றுகிறது. வேறு மாதிரி வாழ தையிரியம் தேவையில்லை. நல்லதை செய்து வாழவே தையிரியம் தேவை.
‘இப்படி’ செய்திருந்தால் ‘அப்படி’ வாழ்ந்திருக்கலாம், நல்ல பெயர் பெற்றிருக்கலாம், settle ஆகியிருக்கலாம் …. ஏகப்பட்ட ‘லாம்’ கள் ! எனக்கு அப்படி தேவையில்லை என்று தோன்றும். இப்படித்தான் நான் – என்பது Adamant statement அல்ல. அது என் மனசாட்சியின் மனநிலையில் நான் ஒன்றி வாழும் குறியீடு. ஆக .. அங்கே நான் ” சிறப்பாக வாழ்கிறேன் “. அது போதும் எனக்கு ! மனசாட்சி கொடுக்கும் Certification ஐ விட ஒரு certification உண்டா ?
சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் – ” நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் இல்ல ” ! இது ஏன் மிகவும் பிடிக்கிறது என்று கேட்டவர்களுக்கு … அதில் இரண்டாவது வரி மற்றவர்களுக்கு. முதல் வரி எனக்கு. ஆம். உலகம் பார்க்கமுடியா பார்வை என்று ஒன்று உண்டு. அது தனி மனிதனின் மனசாட்சி பார்வை. ஆகவே உலகத்திற்கு தனி மனிதன் தவறாகவே தெரிவான் – அவன் எவ்வளவு உயரம் சென்றாலும் !
நல்லதை செய்வோம் – உலகிற்கு அல்ல, உள்ளே அமைதியாய் வழிநடத்தும் – மனசாட்சிக்கு !
அப்படி வாழ முன் வாழ்த்துக்கள்.