நான் எனப்படும் நான் : 20
#நான்எனப்படும்நான்
ஒருமுறை என்னிடம் Counselling கிற்காக வந்த ஒருவரின் செயல்பாடுகள் வித்தியாசமான ஒன்றாக இருந்தது.
” சொல்லுங்க .. பார்க்கலாம் ” என்பது போன்ற attitude இல் இருந்தார்.
நான் சிரித்துக்கொண்டே இன்னொரு attitude இல் சொன்னேன்.
” இந்த Attitude இருக்கும் வரை எதுவும் சொல்லப்போவதில்லை. நிறை குடத்திற்கு நீர் தேவை இல்லை ”
அவரிடம் உடனே ஒரு shift தெரிந்தது.
இதை கவனித்துக்கொண்டிருந்த நண்பர் என்னிடம் கேட்டார்.
” அவரிடம் ஒரு Attitude இருந்தது. அது தவறு. ஆனால் உங்களிடமும் இருந்ததே ! அது தவறில்லையா ? ”
எனக்கு சிரிப்புதான் வந்தது.
” முள்ளை முள்ளால் … ”
என்று இருவரும் சிரித்தோம்.
💐💐
பயிற்சி வகுப்புகளில் நான் Trainer என்று மற்றவர்களால் பார்க்கப்படுவதால், அமைதியாக, சாந்த ஸ்வரூபியாக, அதிகம் பேசாதவராக, அதிர்ந்து பேசாதவராக, தியானத்தில் இருந்து கொண்டு திருத்துவார் என்று யாராவது நினைத்தால் அது நினைத்தவரின் தவறு.
நான் முகமூடி அணிய விரும்புவதில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். முடிந்தால் முடியும், முடியவில்லை எனில் முடியவில்லை என்றே வாழ்கிறேன். Step 1 Step 2 Step 3 என்று fixed methodologies எல்லாம் என்னிடம் இல்லை. ஒவ்வொரு மனிதனும் தனிதன்மையானவன் என்னும்போது .. ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் தனித்தன்மை நிறைந்தது. ஆதலால் இங்கே பொதுவான 1 + 1 = 2 வெல்லாம் இல்லை.
என்னுடன் பயணிக்க விரும்புவர்களுக்கு முதல் கட்டளை மற்றும் வேண்டுதலே ..
” நான் நானாக இருக்கிறேன். நீங்கள் நீங்களாக இருங்கள். நமக்குள் நடிப்பெதற்கு ? ” என்பதே !
இரு சிறந்த நடிகர்களுக்கு மத்தியில் நடக்கும் Counselling போல கொடுமை இந்த உலகில் இருக்க வாய்ப்பில்லை. இரு யதார்த்த மனிதர்களின் மனம் திறந்த பேச்சை போல ஒரு அழகான Counselling ம் இந்த உலகில் இல்லை.
யதார்த்த மனிதர்களை நாம் புரிந்து கொள்வது கடினம். நடிக்க தெரியாததால் அவர்களை நாம் சரியாக புரிந்துகொள்வதில்லை. இது இங்கே நான் மேற்சொன்ன, Attitude காண்பித்த மனிதருக்கும் பொருந்தும். அவரின் யதார்த்தம் அதுதான். அதை அவர் நடிக்காமல் அப்படியே வெளிப்படுத்தியதால் Counselling எளிதாக மற்றும் சரியாக முடிந்தது.
யதார்த்த மனிதர்களை நான் விரும்புகிறேன். நானும் அப்படியே வாழ்கிறேன். மற்றவர்கள் எம்மை பற்றி புரிவதை பற்றி எமக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை !