Slogging Songs : 21
#SloggingSongs : 21
என்னுடன் பயணிக்கும் பாடல்கள் பல. அவற்றில் ஒன்று இன்று உங்களுடன் தன்னை பகிர்ந்துகொள்கிறது.
💐💐
” ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா.. ”
ஒளி சிந்தும் உறவுகள் என்பதெல்லாம் இருளில் இருப்பது தான் அழகு. கண்கள் கருவிழிகள் பேச ஆரம்பிக்கும் இரவுகள் எப்போதும் மின்னிக்கொண்டே தான் இருக்கும் – இருளிலும் !
💐💐
” மீனம்மா…மழை உன்னை நனைக்கும்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா நீ உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் ”
மழை யாரையோ நனைத்தால் யாருக்கோ எப்படி காய்ச்சல் வரும் ? வரும். அதான் உணர்வுகளின் அழகியல். அவளுக்கு வலி என்றால் அவன் துடிப்பதில்லையா ? அவனுக்கு அழகை என்றால் அவள் அழுவது இல்லையா ?
அப்படி இல்லையெனில் என்ன உறவு அது ?
💐💐
” அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது ”
சில தருணங்கள் நிறம் மாறுவது இல்லை. அப்படியே இருக்கின்றன. வெயில் மழை எல்லாம் அந்த தருணங்களை ஒன்றும் செய்வதில்லை. சொல்லப் போனால், இன்னும் நினைவுகளை அழகாக மாற்றுகின்றன. கடந்த காலம் இல்லா ஒன்று காதல் பண்ணுவது மட்டும்தான். நினைத்த பொழுதில் நிகழ்காலம் என்று மாறிப்போகிறது.
💐💐
” இன்று மோகனம் பாட்டெடுத்தோம் ”
மோகனப் பாட்டு என்று ஒன்று உண்டா என்ன ?ஆம். உண்டு. எந்த விதியிலும் சேரா இராகங்கள் அவை. யாருக்கும் புரியாது. புரிந்தவர்கள் சிரித்து கண்களால் ஆமோதிப்பது மட்டுமே வெளியே தெரியும் சாட்சி.
💐💐
என்ன ? பாடல் காதில் ஒலிக்கிறதா ?
💐💐