நான் எனப்படும் நான் : 25
#நான்எனப்படும்நான் ;
#Zenlp ;
ஒரு ஆரம்பத்தின் கதை ;
20 + வருடங்கள். இந்தியா முழுவதும் பயணங்கள். பயிற்சி வகுப்புகள். அந்த பயிற்சி வகுப்புகளில் நான் சந்தித்த … வெவ்வேறு கலாச்சார மனிதர்கள். மனித உணர்வுகள்…. பண்புகள் … முகமூடிகள்…. நல்ல சிந்தனைகள் … புறம் பேசும் மனித அழுக்குகள் … எதிர்பாரா உதவி செய்த கண் முன் தெய்வங்கள் .. பிரச்சினைகளை சந்தித்த மனிதர்கள், சந்திக்க முடியாது தவறிய மனிதர்கள் .. எழுதிக்கொண்டே செல்லலாம். அவ்வளவு இருக்கிறது இந்த பலகைக்கு பின் !
நான் கடந்த கால ஜெயசேகரன் பிள்ளை – இப்போதைய ஜெயசேகரன் Zen ஆக மாறும் நிகழ்வு கண் முன்னே யதார்த்தமாக நடக்க, சொல்லிக்கொடுக்கும் NLP – Zen னுடன் சேர்ந்து Zenlp யாக மாற்றம் கொண்டு ஒரு Academy யாக உருவாகி நிற்கிறது. இப்படி ஒரு Academy ஆரம்பிக்க வேண்டும் என்பது எம் நீள் நாள் கனவு. பயிற்சி வகுப்பு என்று வந்தாலே Coat Suit என்று தம்மை இழக்கும் பயிற்சி வகுப்பாளர்களுக்கு மத்தியில் … ” நீங்கள் தான் Trainer ஆ ” என்று கேட்கும் அளவுக்கான யதார்த்த ஆனால் திறமை வாய்ந்த Trainers ஐ உருவாக்க வேண்டும் என்கிற அந்த கனவு இப்போது நனவாகிக்கொண்டு … !
வீட்டில் இப்படி ஒரு Name Plate நான் யோசித்தது இல்லை. ( முதலில் வீடு என்பதே என் யோசிப்பில் இல்லை. இமயமலை நோக்கிய வாழ்வில் இங்கே வீடு என்பதெல்லாம் ஆச்சர்ய நிகழ்வுதான் ! ). இந்த Name Plate – பெயர்ப்பலகையை பார்க்கும்போதெல்லாம் … இயற்கையின் திட்டங்கள் மிக பலமானவை என்று தோன்றுகிறது. ” இதனை இவன் முடிப்பான் … ” என்ற கூற்றின் படி அது கட்டங்களை நகர்த்தி எம்மை வைத்து Chess ஆடுவதை என்னால் உணர முடிகிறது !
இன்னும் நான் கற்பாளர் தான் – பயிற்றுனர் அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ( I am a Learner, not a Trainer ! )
ஒவ்வொரு நாளும் நான் கற்கும் புதிய வகை பாடங்கள் தான் இந்த பெயர்ப்பலகை யின் முதுகெலும்பு. அப்படி நான் கற்கும் வரை இந்தப்பலகை எம் வீட்டின் முகப்பை அலங்கரிக்கலாம்.
ஒரு முறை என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு நான் சொன்ன பதிலை இங்கே சொல்ல விரும்புகிறேன். எனக்கு பின்னும் இந்த பெயர்ப்பலகை அந்த பதிலை சொல்லிக்கொண்டே இருக்கும்.
” நான் இழந்தது என்று எதுவும் இல்லை. அனைத்தையும் பெற்று இருக்கிறேன் ! “