நம்பிக்கை மனிதர்கள் 007
#சாய்கிருபா #திருப்பூர் #கவின் #அமுது #ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அவருக்கு கவின் என்ற பெயரை வைத்தபோது, அவரின் தந்தை அநேகமாக .. ” எம் மகளின் மன அழகை போல அவர் அருகாமையை உணரும் குழந்தைகளின் மனமும் ஆகக்கூடும் ” என்று யோசித்திருக்க வேண்டும் !
அதென்ன சாய்கிருபா ?. Special குழந்தைகள் என்பவர்களுக்கு இங்கே இருக்கும் தெய்வங்களும் கோவில்களும் புரியாது ! அவர்களுக்கு நாம் பேசும் மொழியும் புரியாது ! ஏன் என்றால் … நாமும் நம் தெய்வங்களும் எப்போதும் .. கடந்த, எதிர் காலங்கள் சார்ந்தே பேசுவோம். Special குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு ‘ இக்கணம் ‘ முக்கியம். அவ்வளவு தான் அவர்களின் வாழ்க்கை. இதை தேடிக்கொண்டிருக்கும் யோகிக்களுக்கு மத்தியில், இக்கணத்தை மட்டுமே வாழும் யோகிகள் அக்குழந்தைகள். கையெடுத்து கும்பிட தோன்றும் நமக்கு ! அவர்கள் வாழும் பள்ளி தான் சாய்கிருபா. அசுரன், பிகில், கைதி, தர்பார் பற்றி ஆஹா ஓஹோ என்று பேசியது எல்லாம் இருக்கட்டும் ! திருப்பூருக்கு ஒரு Visit தான் செய்து பாருங்களேன் ! நடமாடும் Heroes இங்கே வாழ்ந்து கொண்டிருப்பது புரியும் !
திருப்பூர் பொதுவாகவே இந்தியாவின் பல விடயங்களுக்கு முன்னோடி ! குட்டி ஜப்பான் என்று ஒரு முன்மாதிரியை – இந்தியாவிற்கு கொடுத்த, அதே திருப்பூர் தான் இப்போது Special குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியை கையில் எடுக்கிறது. ” அமுது ” என்று ஒரு விற்பனை நிறுவனம். உணவு, மளிகை பொருட்கள், இனிப்பு, கார வகைகள் .. செய்து விற்கிறார்கள். யாரால் நடத்தப்படுகிறது ? ஆம். Special குழந்தைகளால் ! ஆமாம். அவர்களே நடத்துகிறார்கள். அவர்களின் திறமை அப்படி – நேற்று நாளை எல்லாம் அவர்கள் குழப்பிக்கொள்ளவில்லை. இங்கே இக்கணம் என்று வாழ்ந்து, விற்பனையை கவனித்து சிரித்து செல்கிறார்கள். அந்த சிரிப்பை நம் corporate களிடம் கூட பார்க்க முடியாது !
இந்த முயற்சி எதற்கு ? Special குழந்தைகள் தனித்து வாழ வேண்டியவர்கள் அல்ல. நம்முடன் வாழ வேண்டியவர்கள். நம் போலவே வாழக்கூடியவர்கள். நாமும் அவர்களும் வேறு வேறல்ல – என்று உணர்த்தும் முயற்சி தான் இந்த விற்பனையகம் ! இந்த தீபாவளிக்கு அவர்கள் பல நிறுவனங்களை தொட்டிருக்கிறார்கள். வீடுகளை தொட்டிருக்கிறார்கள். நான் என் சார் 10+ நபர்களுக்கு அவர்கள் செய்த பலகாரங்களை அனுப்பினேன். புத்தாண்டிற்கு 50 பேருக்கு அனுப்பவிருக்கிறேன்.
இந்த புகைப்படத்தில் நான் கையில் வைத்திருக்கும் சிவப்பு Cover – அவர்கள் செய்தது. பொதுவாகவே சிவப்பு ஓர் அருமையான நிறம். இரத்தத்தில் நிற வேறுபாடுகள் இல்லை. மனிதர்களிலும் ! ஆம். Special குழந்தைகள் …நம்மில் ஒருவர். அந்த இரத்தம் சிரித்தால் நாம் சிரிப்போம். அவர்களுக்கு அழ தெரியாது. அவர்கள் அழ வாய்ப்பும் இல்லை. கவின் இருக்கும் இடங்களில் மனம் அழகாய் இருப்பதால் – சிரிப்பு மட்டுமே அவர்களின் வரம் !
அந்த சிரிப்பை நேரில் காண நீங்கள் தயாரா ?