நான் எனப்படும் நான் : 026
001:
இந்தக் கேள்வி பல முறை எறியப்பட்டு இருக்கிறது. Who are you ? என்று கேட்டால் பதில் சொல்லலாம். Who is Jay ? என்று என்னிடம் கேட்க வாய்ப்பில்லை. அது எனக்கு பின்னே கேட்கப்படும் கேள்வி என்பதால் நான் பதில் சொல்வதில்லை.
அதே நேரம் இப்போதெல்லாம் என்னிடமே இந்த கேள்விக்கு பதில் சொல்லப்படுகிறது. ( ஆம். இப்போதும் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுவதில்லை. ) அப்படி சொல்லப்படும் பதில்களை நான் சிரித்து கடந்து விடுகிறேன். ஏன் எனில் …
உலகம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக பார்க்கும். அதற்கெல்லாம் react செய்து கொண்டிருந்தால் நாம் போகவேண்டிய இடத்திற்கு போய் சேர முடியாது. இன்னும் சொல்லப்போனால் .. உலகத்தின் வார்த்தைகளை காதில் வாங்காமல் எம் இலக்கை நோக்கி நான் செல்ல ஆரம்பித்த பின்பு தான் … வாழ்க்கை இன்னும் இலகுவாக வசப்பட ஆரம்பித்தது !
💐💐💐💐
ஏன் அவரின் எழுத்து வித்தியாசப்படுகிறது ? –
என்று ஒரு கேள்வி. இதுவும் எனக்கு பின்னால். இதற்கு நான் பதில் சொல்லலாம்.
என்னை பற்றி, என் சார் மனிதர்களை பற்றி, நான் சந்தித்த மனிதர்களை பற்றி, சூழ்நிலைகளை பற்றி, பயணங்கள் பற்றி .. தோல்விகள் வெற்றிகள் துரோகங்கள் மகிழ்வுகள் பற்றி எழுதுவதால் இருக்கக்கூடும். அப்படி எழுதாமல் .. உங்களை பற்றியோ அல்லது யாரோ ஒருவரை பற்றியோ நான் எப்படி எழுத முடியும் ? ஏன் அப்படி எழுத வேண்டும் ?
” எதை எதையோ ” எழுதுவதை விட .. எம் live அனுபவங்களாக எழுதுவதையே நான் விரும்புகிறேன்.
💐💐💐💐
எனக்கு பின்னே ஓடும் உபயோகமான … மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்.
விரைவில்.





