நான் எனப்படும் நான் : 027
002:
நீங்க ஒரு Photographer ஆ ?
நிறைய பேருக்கு இன்னும் நான் JSP தான். JSP Photography என்னுடைய புகைப்படங்கள் தாங்கும் Brand name. புகைப்படங்கள் என்னுடைய மூச்சு வடிவங்கள். இந்தியா முழுக்கவே சுற்றிய அனுபவ புகைப்படங்கள் இன்னும் ” காத்துகிடத்தலில் ” இருக்கின்றன. குறிப்பாக இமயமலை புகைப்படங்கள் !
கூடிய விரைவில் கண்காட்சி ஒன்று உறுதி !
💐💐💐
நீங்க ஒரு எழுத்தாளரா ?
நான் ஒரு கற்றாளன் என்பது மட்டும் எனக்கு தெரியும். கற்றவைகளை எழுதுகிறேன். அவை வாசிக்கப்படுகின்றன. Soul Of A Wanderer புத்தகத்தின் மூலம் என் பயணம் ஆரம்பிக்கிறது. என் பயணங்களில் நான் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் …அனைத்தையும் அதில் எழுத்துக்களால் சமர்ப்பித்து இருக்கிறேன்.
தமிழில் ” கற்றுக்கொள்ளும் பயணங்கள் ” எழுதி Kindle இல் வெளியிட்டு இருக்கிறேன். இரண்டும் எனக்கு மிக நெருக்கமானவை !
💐💐💐
பயணித்துக்கொண்டே இருக்கிறீர்கள். என்ன தான் செய்கிறீர்கள் நீங்கள் ?
நான் ஒரு NLP Trainer. Zenlp Academy மூலம் எம் பயிற்சி வகுப்புகளை Corporate நிறுவனங்களுக்கும், Trainers களுக்கும், கல்லூரி, பள்ளிகளுக்கும், சிறு தொழில் நிறுவனங்களுக்கும், உற்பத்தி ஆலைகளுக்கும் Customised ஆக நடத்துகிறேன். தனி மனித Counselling வேறு வகை. குடும்பங்களுக்கான Counselling இன்னொரு வகை. Teens program வேறு களம். ஆக இந்த ஒவ்வொரு நிகழ்வுகளை நோக்கியும் எம் பயணம் தினம் பயணிக்கிறது. 365 நாட்களில் அநேகமாய் 300 நாட்கள் பயணம் சார்ந்து ! ஆகவே பயணித்து கொண்டே இருப்பது போல தோன்றும். இப்போதும் கூட … கோவை – கொடைக்கானல் – மதுரை – சேலம் – கோவை – மும்பை – சென்னை …. என்று எம் பயணங்கள் நீள்கின்றன.
💐💐💐