நான் எனப்படும் நான் : 029
004:
ஒரு Feedback ;
” என் அம்மாட்ட அடுத்த ஜென்மத்துல எங்க பிறக்கனும்.. யாரா பிறக்கனும்னு கேட்டேன்.
நான் எதிர்பார்த்த பதில்.. நான் புருஷனா பிறக்கனும். உன் அப்பா எனக்கு பொண்டாட்டியா பொறக்கனும்னுதான்.
ஆனா என் அம்மா சொன்னது.. வானம்பாடியா பொறக்கனும். வானத்துலயே சுதந்திரமா பறக்கனும்னு சொன்னாங்க.
இப்ப ஜெய் சுத்துறத பாத்தா எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை இப்பவே வாழ்ந்து பாக்கனும்னு தோணுது. ”
நன்றிகள் Manimaran.
💐💐💐
” சுத்தறது ” – என்கிற வார்த்தைக்கு என் அகராதியில், எனக்கு மிகப் பிடித்த வார்த்தையான “நாடோடி’ என்று அர்த்தம். அதுசரி நாடோடி என்றால் என்ன ? நாடு முழுக்க ஓடிக்கொண்டே இருப்பவன் என்று அர்த்தமா ? இல்லை. ‘நாடு’ என்கிற பெரும் பார்வையால் மனிதர்களை படிப்பவன் ! ஆம். பெரும் பார்வை. பறவை பார்வை. வான் பார்வை. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் !
அப்படி சில பார்வைகளை இங்கே பதிகிறேன்.
💐💐💐
* இயற்கை செய்யும் எதுவும் சரியே ! – The Everlasting Lesson !
* நமக்கும் மீறிய கணக்குகள் உண்டு. காற்றடிக்க இலை வீழ்ந்ததை நாம் வீழ்த்தியதாக சொல்வது போல நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ளும் செயல் எதுவும் இல்லை ! – Humurous Beings
*பற்பல விடயங்கள் சேர்ந்தே வெற்றி. நம்மால் / என்னால் என்பதெல்லாம் myth.
* பிறப்பு இறப்பு எல்லாம் முன்னமே முடிவு செய்யப்பட்டவை என்பதால் .. இடையில் நாம் ஆடுவது just ஒரு ஆட்டமே. எந்த வரலாறும் நிலைப்பதில்லை ! – Time Forgets, Forgives and Foresees.
* மனிதர்கள் தான் கொடிய மிருகங்கள். மிருகங்கள் எப்போதும் மனிதர்களை விட உயர் ரகம். – Sixth Sense is not a complete advantage !
* மனிதர்கள் இருக்கும் வரை நல்லவையின் கெட்டவையின் பிரதிபலிப்புகள் இருந்துகொண்டே இருக்கும். – Supplements are inevitable.
* இங்கே நல்லவர்கள் உண்டு. நல்லவர்களாக முயற்சிப்பவர்கள் உண்டு. நல்லவர்களாக நடிப்பவர்கள் உண்டு. நல்லவராக இருக்க நினைத்து ஆனால் முடியாதவர்கள் உண்டு. ஆக .. சூழ்நிலை தான் நல்லவன் கெட்டவனை தீர்மானிக்கிறது. சூழ்நிலை அனுமதிக்கும் வரை தான் ஒரு மனிதனின் முகமூடி வாழும். சூழ்நிலை முடிவெடுத்தால் முகமூடிகள் காணாமல் போகும். ஆக …சூழ்நிலைகள் தான் உண்மையான படிப்பினை களங்கள் !
A Situation holds the definition of Who you are !
* கடவுள் என்பது – மனிதனை நியாயத்தின்பால் பிணைத்து வைப்பதற்கான முயற்சி. எந்த மிருகத்திற்கும் கடவுள் இல்லை.
Illusion holds fear and Fear makes one becoming better.
* எல்லைக்குள்சேமிப்பு எவ்வளவு நல்லதோ அவ்வளவு கெட்டது – எல்லை மீறி சேமிக்க நினைப்பது. அங்கேதான் மனித உணர்வின் அநியாயங்கள் வெளிவருகின்றன.
Too much Calculations hides reality !
* உறவுகள், நட்புக்கள் அனைத்தும் காலம் செய்யும் இணைப்புகள், பிரிவுகள். நம் மனசாட்சிக்கு நாம் சரியாக இருக்கிறோமா என்பதை தவிர இணைதல் பிரிதலில் வேறொன்றுமில்லை ! விளக்கங்கள் எந்த காலத்திலும் ஏற்கப்படுவதில்லை. ஏற்கப்பட்டால் அதற்கு பின் சுயநலம் என்று ஒன்று உண்டு !
There is nothing called joining or departing. Those are just a moment in a Life Movie.
* யாதும் ஊரே யாவரும் கேளிர் … தீதும் நன்றும் பிறர் தர வாரா ! இது இரண்டு போதும் வாழ்க்கையை சிறப்பாக வாழ !
Best things evolves in Simplicity.
* உனக்கு தேவையான அனைத்து சக்திகளும் உனக்குள்ளேயே இருக்கிறது – விவேகானந்தர்
இந்த வரி தான் உலகின் மிகச்சிறந்த Training Manual.
* இன்றைய நாளை வாழ்வதை விட பெரும் வாழ்க்கை எதுவும் இல்லை. ஆகவே இங்கே இப்போது இக்கணத்தில் வாழ்ந்து விடுவது சால சிறந்தது.
Live. Here. Now.
பயணிப்போம்.