நான் எனப்படும் நான் : 032
007
மனிதர்களின் பல வகைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் – என் பார்வையில் !
💐💐💐
சந்தேகப் பார்வை மனிதர்கள் ;
மனிதர்கள் ஏன் சந்தேகமாகவே பார்த்துக்கொண்டே நகர்கிறார்கள் ?
* யார் நீங்க ?
* என்ன வேண்டும் ?
* யாரை பார்க்க வந்தீர்கள் ?
* எங்க போகணும் உங்களுக்கு ?
அவ்வளவு பயம் அவர்களுக்கு !
கடந்த கால அனுபவங்கள் தான் மனிதர்களுக்கு பயத்தை உருவாக்குகின்றன. அதனால் புதிய மனிதர்களையும் கடந்த கால பார்வையால் பார்க்கிறார்கள். அதனால் எதையும் சந்தேகப்படுவதே இவர்களின் பார்வையாய் மாறிவிடுவதை கவனிக்கிறேன். அப்படி மனிதர்களுக்கு எம் பதில் .. ” இங்கே தான் இருக்க போகிறோம். உம் சந்தேகமும், எம் உண்மையும் ஓர் நாள் கண்டிப்பாக சந்திக்கும் ! ”
💐💐💐💐
இன்னொரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள் …
முகத்திற்கு ஒன்றும் முகத்திற்கு பின் ஒன்றுமாக பேசுபவர்கள். இவர்களை பொதுவாக நான் பொருட்படுத்துவதே இல்லை. இவர்களின் குணாதிசயங்கள் ஆச்சரியமானது.
* இங்கே சிரிப்பதும் பெருமையாக பேசுவதும் வேறொரு இடத்தில் … இகழ்ந்து பேசுவதும்.
* நம்மிடம் சரி / தவறு எல்லாம் பிறரிடம் வேறு வகையாக சொல்லப்படும்
இவர்களை போன்ற ஒரு சுவாரசியமான மனிதர்கள் இருக்க முடியாது. இவர்களின் உலகம் நடிப்பின் பட்டறையாக இருப்பதால் இவர்களுக்கு இவர்களே தினசரி போட்டிதான். ஒரு உண்மையை பல பொய்களாக்க இவர்கள் படும் பாடு… ஹய்யோ .. பாவம் இவர்கள். உண்மை பேசினால் அடுத்த வார்த்தை தேவை இல்லை. பொய் சொன்னால் அடுத்த தலைமுறையும் போதாது !
இப்படி பேசிக்கொண்டிருந்த ஒருவரிடம் கடைசியாக சொன்னேன் ..
” நீங்கள் என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். உண்மையற்ற ஒன்றுடன் நீங்களுமாக உண்மையுடன் நானுமாக வாழ்வோம். ஏதோ ஒரு நாள் நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பீர்கள். அன்றும் நான் உங்களிடம் சிரித்துதான் பேசுவேன். உங்களால் அப்படி பேச முடியுமா என்று யோசியுங்கள் ”
அமைதியாக என்னை பார்த்தவரை கவனித்து மீண்டும் சொன்னேன் ..
” உண்மையுடன் இருப்பதால் எனக்கு கொஞ்சம் advantage அதிகம் Mr Disadvantage Bro ! ”
💐💐💐💐
பயணிப்போம்.