நான் எனப்படும் நான் : 034
009
” 18 வருடங்கள். ஒரே புத்தகம். 5 முறை வாசிப்பு. அதுதான் எம் வாழ்க்கையை நடத்துகிறது. நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் என்னை ” இதை செய் / இதை செய்யாதே ” என்று எனக்கு சொல்லிக்கொடுக்கும். அப்படியே வாழ்கிறேன் ”
என்று பேசும் அந்த மனிதரை சந்தித்த போது மனம் இலேசாக மாறியது.
மிக எளிமையான தோற்றம். சாதாரண சட்டை / pant ஆடை. Two Wheeler சாவி. மெல்லிய பேச்சு. அவ்வளவு தான் அவர். விரலில் திருமண உறவின் அடையாளமாய் ஒரு மெல்லிய மோதிரம்.
” முதல் முறை bible படித்தபோது ஒன்றும் புரியவில்லை. இரண்டாம் முறை கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. மூன்றாம் நான்காம் முறை ஓரளவிற்கு. ஐந்தாம் முறை தான் வாழ்க்கையோடு relate செய்ய முடிந்தது. இதற்கு 18 வருடங்கள் ஆனது. ” என்று மென்மையாக சிரிக்கிறார். ஆம். அவர் படிக்கும் ஒரே புத்தகம் Bible.
” நமக்கென்று இருப்பது நடக்கும் / கிடைக்கும். நமக்கு இல்லையென்பது விலகும். எங்கும் எதற்கும் அலைய வேண்டியதில்லை. நாம் செய்ய வேண்டியதை செய்தால் போதுமானது. அவனின் Calculations are very Precise ”
அதற்கான அவரின் வாழ்வில் நடந்த உதாரணங்களை சொல்கிறார். கேட்கவே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது.
” விபத்தில் அடிபட்டு கோமாவில் 09 நாட்கள். ஆனால் பையில் கொண்டுவந்த விலைமதிப்பு மிக்க பொருட்கள் அப்படியே இருந்தன. யாரும் அதை களவாடவில்லை. நமக்கானது நமக்காக இருக்கும். வேறெங்கும் செல்ல வாய்ப்பில்லை. ஒட்ட வேண்டியது ஒட்டும். அதே போல் .. உதிரவேண்டியதும் உதிரும். ”
தத்துவம் அவருக்கு எளிதாக வருகிறது. பின்னே ? ஒரே புத்தகத்தை 5 முறை, 18 வருடங்களாக படித்தால் ?
” காலையில் ஒன்றரை லிட்டர் வெந்நீர். பின் ஒரு நிறைவான Breakfast. மதியம் முழு meals. மாலை fruits. No tea coffee milk. அவ்வளவு தான் எம் உணவு. நல்ல உழைப்பு. ஆக Doctor ஐ பார்த்ததே இல்லை. எம் குழந்தைகள் junk food உண்ண மாட்டார்கள். நானும் உண்பதில்லை ”
வாழ்க்கையின் எளிதான பக்கங்கள் தான் உணவு. நாம்தான் அவற்றை கடுமையான ஒன்றாக மாற்றிக்கொள்கிறோம்.
” இப்போ .. இதோ இங்கே பேசிக்கொண்டு இருக்கும்போதே … இறப்பு வந்தால் சந்தோஷமாக இறந்துபோவேன். அவ்வளவு நிறைவாக வாழ்கிறேன். ”
என்று பேசுபவரை கவனிக்கிறேன். என் எண்ணங்கள் பல அவரின் பேச்சில் கலந்து கரைந்து நிற்பதை கவனிக்கிறேன். Who is Jay ? என்று கேட்பவர்களுக்கும் அவரின் பல பதில்கள் தான் பதில்.
18 வருடங்களாக ஒரே புத்தகத்தை 5 முறை படிக்கும் ஒரு ஆளுமையை சந்தித்த மகிழ்வு எனக்கு.
பின்னே … கற்றாரை காற்றாரே காமுறுவர் என்பது .. சும்மாவா என்ன ?