நான் எனப்படும் நான் : 035
#WhoisJay ;
: 010
#57YearsOld
#Plus10
💐💐💐
வயதை குறைத்து காண்பிப்பதில் என்ன சுகமோ நமக்கு ? 10 வருடங்கள் குறைத்து என்று சொல்ல முனைகிறோமே, 10 வருடங்களை அதிகமாக சொல்லும் தையிரியம் இருக்கிறதா நமக்கு ?
💐💐💐
வயதை குறைக்க நினைப்பது ஒரு myth. Illusion. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இந்த வயதிற்கு இருக்க வேண்டிய உடலை, கண்டதை உண்டு கெடுத்த நாம், நல்ல உணவுகளை உடற்பயிற்சிகளை செய்து அதே உடலை திரும்ப பெறுவது .. எப்படி இளமையாக என்று சொல்ல முடியும் ? இது பலருக்கான வியாதியாகவே இருக்கிறது. 57 வயதில் உடல் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. அவ்வளவு தான்.
💐💐💐
முதுமை எப்படி வெறுக்கத்தக்க நிகழ்வாக மாற முடியும் ? முதுமை போன்ற அழகு உண்டா ? முதிர்ச்சியான புரிதல் தான் வாழக்கையில் அழகு. மற்ற அழகுகள் சில காலம் மட்டுமே நிலைக்க .. முதிர்ச்சியான புரிதல் காலத்திற்கும் நிலைக்கும் !
💐💐💐
ஆம். எனக்கு 57 வயது – என்று சொல்லும் பக்குவம் வேண்டும். நான் இன்னமும் சில வருடங்கள் தான் இந்த பூமியில் இருக்க போகிறேன் என்ற புரிதல் வேண்டும். 57 வயது ஆள், 30 வயது என்று காண்பிக்க நினைப்பதால் .. இன்னும் 30 வருடங்கள் வாழ்ந்துவிட முடியாது. 60 என்பது இறப்பு வருடமெனில் .. இன்னமும் 3 வருடங்கள் தான் என்ற திண்ணம் மனதில் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு குறைத்து காண்பிப்பதால் நாம் குறைந்த வயது உடையவர்கள் அல்ல !
💐💐💐
பெண்களுக்கு தான் இப்படி என்று முன்னம் சொல்லப்பட்டது. ஆனால் ஆண்களும் இப்போது வயதை குறைத்து பேசுவதை பெருமை என்று எண்ண ஆரம்பித்ததை கவனிக்கிறேன். கருப்பு வண்ணம் பூசுவதால் உள் உறுப்புகளுக்கு இளமை திரும்ப வாய்ப்பில்லை மக்களே. முதுமை என்றும் முதுமை தான். எனக்கு 60 வயது ஆகிறது என்று சொல்வதில் ஒரு தனி மகிழ்வு உண்டு. அதை மறைத்து சொல்வதில் இருக்கும் மகிழ்வு என்ன மாதிரியான மகிழ்வாக இருக்க முடியும் ?
💐💐💐
57 வயதா உங்களுக்கு ? என்று கேட்கும் அன்பர்களுக்கு .. முதல் Paragraph ஐ மீண்டும் படிக்கவும்.
😊😊😊
உள்ளதை உள்ளபடி சொல்வோம் மக்களே. மனதில் இளமையாக இருப்பது வேறு.! தோற்றத்தை இளமையாக காட்ட முயற்சிப்பது வேறு !
💐💐💐
பயணிப்போம்.