நான் எனப்படும் நான் : 37
#WhoisJay
: 012
💐💐💐
” உங்களிடம் பயிற்சி வகுப்புக்கு வந்தால், நீங்கள் கேட்கும் கேள்விகளில் உள்ளே என்னவோ செய்கிறது. நான் ” செய்ய வேண்டியவற்றினை ” ( இதுநாள் வரை செய்யாமல் வைத்திருந்தவற்றை ! ) …உடனே செய்ய ஆரம்பிக்கிறேன். இதே நான் நிறைய பல பயிற்சி வகுப்புகளை பல பயிற்சியாளர்களுடன் சந்தித்திருந்தாலும் … உங்களிடத்தில் மட்டும் இது சட்டென நடைபெற காரணம் என்ன ? ”
கேட்டவருக்கு ஒரு 40 வயது இருக்கலாம். பெரும் நிறுவனத்தின் மேல்நிலை ஊழியர் அவர்.
” மற்ற பயிற்சியாளர்கள் அநேகமாக உங்களுக்கு பிடித்ததை பேசியிருக்கக்கூடும். நான் உங்களுக்கு ” தேவையானதை ” பேசுகிறேன். ” என்று சிரித்தேன்.
” அதே அதே ” என்று அவரும் சிரித்தார்.
💐💐💐
“பிடித்ததை” பேசுவதற்கும் “தேவையானதை” பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்றவர்களுக்கு “பிடித்ததை அல்லது பிடிக்கும் என்பதை ” பேசினால் …உங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். உங்களின் பேச்சுக்கு கைதட்டல் பலமாக இருக்கும். ( பட்டிமன்றங்கள் இந்த வகை ! இந்தக்கால பட்டிமன்றம் பார்த்து வாழ்க்கை மாறியது என்று சொல்பவர்கள் மிகச் சிலராக இருக்கக்கூடும் ! ). அதேபோல மற்றவருக்கு பிடிக்கக்கூடிய… உங்களின் எழுத்துக்களுக்கு LIKE அதிகம் விழும். Followers அதிகம் இருப்பார்கள்.
ஆனால்…. மற்றவர்களுக்கு “தேவையானதை மற்றும் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் விடயங்களை ” பேசும்போது அது அவர்களிடம் ஏற்படுத்தும் யோசிப்பில் அவர்கள் வாழ்க்கையின் அடுத்த நிலை நோக்கி நகர ஆரம்பிப்பார்கள். அந்த யோசிப்பு அவர்களுக்குள் நிறைய வலியினை ஏற்படுத்தும் ! அங்கே இருந்து அவர்கள் முன்னேற்றம் நோக்கி நகர ஆரம்பிப்பார்கள்
💐💐💐
பிடித்ததை பேசுவதற்கும் / தேவையானதை பேசுவதற்கும் .. சில உதாரணங்களை கவனிப்போமா ?
💐 நல்லதை செய்தால், நீண்ட காலம் மகிழ்வாக வாழ்வோம்.
💐 செய்ய வேண்டியதை உடனடியாக செய். இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். மகிழ்ச்சி நிலையான ஒன்று அல்ல. இன்று என்பது.. உனக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு
///
💐 எல்லாம் நன்றாகவே நடக்கும்
💐 நீ பொறுப்பேற்க பழகு. நீ என்ன செய்கிறாயோ அதற்கு தான் வாழ்க்கை அமையும்.
///
💐 கடவுளிடம் வேண்டு. கேள். அனைத்தும் கிடைக்கும்.
💐 மாற்ற முடியாததை ஒப்புக்கொள். மாற்ற முடிந்ததை, வேண்டியதை, கூடியதை … உடனடியாக செய். உன் வாழ்க்கை உன் எண்ணத்தில் !
///
பயணிப்போம்.





