நான் எனப்படும் நான் : 044
#WhoisJay ? : 019
💐💐💐
நிறைய சந்தித்தாயிற்று. கடின சூழ்நிலைகள் என்பது வாழ்வின் பகுதியாகவே மாறிப்போன வாழ்வு – ஆரம்ப காலங்களில். இப்போது ? முதலில் கடினமாக தெரிந்தவை எல்லாம் இப்போது கற்கும் பாடங்களாக !
10 ஆம் வகுப்பில் …தவறாக என்னை புரிந்துகொண்டு தண்டித்த ஆசிரியர் தான் முதல் அதிர்ச்சி எனக்கு. அப்போது ஆரம்பித்த ” நீங்களா இப்படி ? ” அதிர்ச்சி, காலப்போக்கில் .. ” நீங்களா ? ” என்று மாற்றம் அடைந்து, பின் ” ஓ .. நீங்களுமா ? ” என்று உருமாறி, இப்போது … ” நீங்கள் எப்போ என்று தெரியவில்லை ? ” என்று சிரித்து சொல்வதில் நிற்கிறது. வாழ்க்கையின் அதிர்ச்சிகள் எல்லாமாக சேர்ந்து .. கடைசியில் … ” ஹஹஹஹ ” என்று மாற்றம் அடைவதே உண்மை. ஆம். சிரித்து கடப்பதில் இருக்கிறது வாழ்க்கை !
தொழில் உலகில் பலரை பார்த்தாகி விட்டாயிற்று. உண்மைக்கும் ஒப்பனைக்குமான இடம் அது என்று புரிந்து புரியாமல் நின்ற போது எனக்கு முன்னே இரு Choice இருந்தது. நடிக்கணுமா ? அல்லது இதுதான் நான் என்று வாழ வேண்டுமா ?. யோசிக்கவேயில்லை. நான் இரண்டாவதை தேர்ந்தெடுத்து சிரித்து வாழ ஆரம்பித்தேன். நடித்தவர்களில் பெரும்பாலோர் வேடம் களைந்து கலைந்து … வழியில் என்னை சந்தித்த போதும் … நான் நானாகவே வாழ இருப்பதை சொல்லி கடக்கிறேன். ஒப்பனைக்கு என் முகம் available இல்லை !
கூடவே இருந்து ஆனால் என்னை ஏமாற்றுவதாக நினைத்து தன்னை ஏமாற்றிக்கொண்ட ஒரு Excellence ஐ நினைத்துப் பார்க்கிறேன். அவர்களிடம் கடைசியாக நான் பேசியது எம் ஞாபகத்தில் இப்போது …. ” மூத்தோர் சொல் வாக்கும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும் ! “. பின்னே ? நினைத்ததை பேச முடியாது, வேறு எதையோ பேசி வாழும் உறவுகள் எதற்கு ?
என்னுடன் பயணிக்கும் உறவுகளிடம் உள்ளதை பேசுகிறேன். அவர்கள் சொல்வதை கேட்கிறேன். அவர்கள் சொல்லாததை நான் புரிய முயற்சிப்பதும் இல்லை. சொல்வதை தவறாக புரிந்து கொள்வதும் இல்லை.
அதெல்லாம் சரி.
இதென்ன @57 ?
பின்னே ? வயசெல்லாம் just number என்று ஆன பின் .. அது எந்த Number ஆக இருந்தால் என்ன ?