நான் எனப்படும் நான் : 046
#WhoisJay ; 021
💐💐💐
எதிரிகள் இருப்பது நல்லது. ஆனால் நான் எப்போதும் கேட்பது ” நல்ல எதிரிகள் ” – அதாவது என் நல்ல சிந்தனைகளை இன்னும் அதிகமாக வெளிக்கொணரும் எதிரிகள் வேண்டும்.
ஆம். எதிரிகளில் இரண்டு வகைகள் உண்டு.
1. நம் எண்ணங்களை கீழ் நோக்கி இழுத்து நம்மை கீழே தள்ளும் எதிரிகள்.
2. நம் எண்ணங்களை உயர்த்தி, அப்படி உயர்த்திய பின்பும், அவர்களின் நல்ல எண்ணங்களால்.. நம்மை வீழ்த்தும் எதிரிகள். ( பிறகு ஏது எதிர்ப்பு ? என்று கேட்க தோன்றுகிறதா ? எதிர்ப்பு என்பது வேறு. நல்ல எதிர்ப்பு என்பது வேறு. )
💐💐💐
” உன்னால் ஆங்கிலம் எழுதவே முடியாது. பேசாமல் தமிழிலேயே எழுது ”
என்று சொல்லும் எதிரிக்கு முன் ..
” முடிஞ்சா ஆங்கிலத்தில் எழுதுடா பார்க்கலாம் ”
என்று சொல்லும் நல்ல எதிரியை தான் எனக்கு மிக பிடிக்கும் !
💐💐💐
” இவன் சரியில்லை அவன் சரியில்லை … ”
என்று சொல்லும் எதிரிக்கு முன்
” நான் இப்படி வாழ்கிறேன், முடிந்தால் அவனை அப்படி வாழச் சொல் ”
என்று சொல்லும் நல்ல எதிரியை நான் எதிர்பார்ப்பேன்.
💐💐💐
” தினசரி 10000 steps நடை எல்லாம் வாய்ப்பே இல்லை ”
என்று சொல்லும் எதிரியை விட …
” 12000 நடக்க முடிகிறது என்னால். உன்னால் ஏன் முடியாது ? ”
என்று அடுத்த உயரம் அடைய தூண்டும் நல்ல எதிரி தான் மிக முக்கியம் !
💐💐💐
” அவன் உதவியே செய்வதில்லை ”
என்று சொல்லும் எதிரிக்கு முன் ..
” நான் செய்த உதவிகளை அவனை Beat செய்ய சொல் ”
என்னும் நல்ல எதிரியை நான் ரசிப்பேன்.
என்னை பொறுத்தவரை … எதிரி என்னை Challenge செய்ய வேண்டும். அப்படி ஒரு எதிரி என்னுடன் காலம் முழுக்க பயணிக்கலாம். வெத்து வார்த்தைகளால் என்னை வெல்ல நினைக்கும் எதிரிக்கு எம் வாழ்வில் வெளிக்கதவுக்கு வெளியேயும் இடம் இல்லை !
💐💐💐
ஒரே ஒரு வெறியோடு ….ச்சை .. வரியோடு முடிக்கிறேன்.
” நியாயம் இருந்து எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன் அது எம் பழக்கம் ”
💐💐💐