நான் எனப்படும் நான் : 047
#Whoisjay ; 022
எனக்கான ஒரு Space வேண்டும். அந்த Space இல் நான் நானாக வாழ்வதை தொந்தரவு செய்யாத ஒரு மனிதம் அருகில் வேண்டும். அங்கே நான் செய்வது சரி / தவறு என்று எந்த அளவீடும் இல்லா ஒரு Non Judgemental Reality வேண்டும். இப்படி இருந்தால் என்னுடன் பயணிக்கலாம். இல்லை எனில் ?
உங்கள் வழி தனி வழி. ஆம். இது பொது வழி அல்ல !
என்னுடன் பயணித்தவர்களுக்கு தெரியும். பயணங்களில் கூட நான் எனக்கான ஒரு Space ஐ வைத்திருப்பேன். அதே போல மற்றவர்களுக்கான space ஐயும் கொடுத்திருப்பேன். ஒரு சிறிய walk போக விரும்பினால் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன். அந்த walk எனக்கானது. அப்படி போவதால் நான் மற்றவர்களை தவிர்க்கிறேன் என்று அர்த்தம் அல்ல. என்னை பெறுகிறேன் என்று அர்த்தம்.
எனக்கு பிடித்த பாடலை கேட்க விரும்பும் அதே நான் தான் மற்றவர்களுக்கு பிடிக்கும் பாடலை play செய்து ரசிப்பேன். எனக்கு பிடித்த புகைப்படம் எடுக்கும் அதே நான் தான் மற்றவர்களின் புகைப்படங்களையும் ரசிப்பேன். இரண்டுக்கும் இடையில் இருக்கும் சிறு இடைவெளியில் இருக்கிறது வாழ்க்கை. அங்கே இடைவெளி இல்லை எனில் Comparison ஆரம்பமாகும். Comparison தான் வாழ்க்கையின் எதிரி. Space கொடுப்பவன் Comparison செய்ய மாட்டான். Comparison செய்பவன் எல்லை மீறுவான்.
” உங்க Personal life பற்றி சொல்லவே இல்லையே ” என்று யாராவது சொன்னால் சிரிக்கிறேன். அந்த சிரிப்பு இருவருக்கும் இடையிலான எல்லையை உணர்த்தும் சிரிப்பு. எல்லை புரிந்தவர்கள் அங்கே நிறுத்தி கொண்டு சிரிக்கிறார்கள். புரியாதவர்கள் எதையாவது கேட்கிறார்கள். என்னுடன் பயணிக்கும் சிலருக்கு சில உரிமைகள் உண்டு. அது எல்லோருக்குமானது அல்ல. இதுவும் பலருக்கு புரிய வேண்டும். மற்றவர்களுடன் பேசும் முன் நான் ” அவர்களுக்கு என்னவாக இருக்கிறேன் ” என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
நீங்கள் அதில் தெளிவாக இருக்கிறீர்களா ?