நான் எனப்படும் நான் : 048
#WhoisJay ; 023
பொதுவாக Trainer Jay ஒரு வருடம் முழுக்க வாழ்ந்து விடுகிறார். Traveller Jay ம் அப்படியே. Writer Reader Jay எல்லோரும் அழகாக வாழ்கின்றனர். Miss பண்ற Jay Photographer Jay தான். அவரை இந்த பயணத்தில் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் நான் !
பயிற்சி வகுப்பிற்குள் இருக்கும் Jay – நிறைவின் அடையாளம். இதை தான் வாழ வேண்டும் என்ற கனவுடன் தன் வாழ்க்கையை தொடங்கிய ஒருவன் அதையே வாழும்போது கிடைக்கும் நிறைவு அது ! நிச்சயம் இதற்கு ஈடு இணை இல்லை. இன்னும் சரியாக சொன்னால் .. இது இருக்கும் வரை நான் இருப்பேன்.
ஆனாலும் .. Photographer Jay வித்தியாசமானவன். இயக்கங்களை ரசிப்பவன். இயற்கையின் பக்கங்களை உறைய வைத்து சிரிப்பவன். இவன் தான் நிறைய நேரங்களில் missing. கடந்த வருடம் 365 நாட்களில் 220 நாட்கள் பயிற்சி வகுப்புகள் / 100 நாட்களுக்கு பயணங்கள் / ஆனால் Photography என்று சில நாட்கள் கூட இல்லை. When You become Busy at Few things, You Miss Many things !
Travel Forum இல் இருக்கும் பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. ” எங்கே அந்த Photographer Jay ? “. நான் சொல்லும் பதில் ” அமைதி “. ஆம். வாழ்க்கையின் busy பயணத்தில் நான் Miss செய்யும் ஒரு பகுதி தான் Photography. அங்கங்கே Cell Phone ல் படங்கள் எடுத்தாலும், Camera தான் best. அநேகமாக இந்த #பொங்கல்பயணம் சில மணி நேரங்களை எம் Camera விற்கு கொடுக்கும் !
நிறைவும் தேடலும் வேறு வேறு. அவை இரண்டும் இரண்டு Verticals. அவற்றை தொடர்பு படுத்த வாய்ப்பில்லை. Training நிறைவு. Photography தேடல். நிறைவில் அடுத்த தேடல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் … தேடலில் நிறைவு இருக்க வாய்ப்பே இல்லை !
#பொங்கல்பயணம் என்ற Hashtag இல் புகைப்படங்களை இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெளியிடுகிறேன். பார்த்து உங்களின் பின்னூட்டங்களை இடலாம். என்ன ? Write up உடன் வேண்டுமா ? பின்னே ? Write Up இல்லாமலா ?
கண்டிப்பாக.





