நான் எனப்படும் நான் : 050
#WhoisJay ; 025
ஏமாற்றங்கள் எம் வாழ்வின் படிக்கட்டுகள்;
💐💐💐
💐 இந்த மனிதர்களை கவனிக்க கவனிக்க எனக்கு முதலில் அவர்கள் மேல் வந்த கோபம் மறைந்து, பின் அவர்களை பற்றி வந்த குழப்பங்கள் மறைந்து, பின் அவர்களால் நடந்த பிரச்சினைகள் மறந்து …தற்போது அவர்களை பற்றி கேள்விப்படும்போது சிரிக்கிறேன். ஆக …’ சிரிக்கிறேன் ‘ என்பது தான் Real Product. இதற்கு மேல் ஒன்றும் இல்லை !
💐💐💐
💐 பல வருடங்களுக்கு முன் ஒரு ஆளுமை- ” இந்திரன் சந்திரன் ” என்றெல்லாம் போற்ற ஆரம்பிக்க – எனக்குள் சிரிப்பு அப்போதே வந்துவிட்டது. ” இது எவ்வளவு நாளைக்கோ ? ” என்ற யதார்த்தம் தான் அந்த சிரிப்பின் காரணம் ! வருடங்கள் சென்று அந்த ஆளுமைக்கு என்னால் ஆக வேண்டியது எதுவுமில்லை என்று ஆன பின்பு – ( அதற்கு முன்னால் என்னால் ஆனதாக நான் நினைத்தது இல்லை ! அதனால் தான் சிரிக்க முடிந்தது ) – இப்போது வேறு வார்த்தைகளை உபயோகிப்பதை கேட்க முடிகிறது. இப்போதும் நமக்கு சிரிப்பு தான். மனிதர்கள் மாறக்கூடியவர்கள் என்று புரிவதால் ” எப்படி எப்படி எல்லாம் ” மாறுகிறார்கள் என்று சிரித்து கடக்க முடிகிறது.
💐💐💐
💐 இன்னொரு ஆளுமை. தேவைக்கு கொஞ்சம் பண உதவி. என்னால் இயன்றதை செய்கிறேன். காலில் விழா குறையாக ” நீங்கள் கடவுள் ” வார்த்தைகள். நான் சிரித்து நகர்கிறேன். அப்போது அந்த வார்த்தைகளை நான் வாங்கிக்கொள்ளவில்லை. பின்னாளில் அதே போல மீண்டும் ஓர் உதவி. முடியாது என்பதை எம் சூழ்நிலைகளை சொல்லி புரிய வைக்க முயற்சிக்கிறேன். ஆனால் …வார்த்தைகள் மாறுகின்றன. எனக்கு சம்பந்தமே இல்லாத வேறு வடிவங்கள் என் மீது வீசப்படுகிறது. அப்போதும் அந்த வார்த்தைகளை நான் வாங்கிக்கொள்ளவில்லை. சிரித்து நகர்கிறேன். ( முதலில் வாங்கிய பணம் கொடுக்காமலேயே இந்த இலட்சணம் ! ). பின்னொரு காலத்தில் மன்னிப்பு கேட்டு பணம் வந்து சேர்கிறது. அப்போதும் சிரித்த முகமாய் கடக்கிறேன். அப்போதும் வார்த்தைகளை வாங்கி கொள்ளவில்லை. ஆனால் ஒன்றே ஒன்றை சொன்னேன் ” ஒரு நல்ல நட்பை இழக்கிறீர்கள் ”
💐💐💐
💐 இன்னொரு ஆளுமை –
” நீங்கள் வந்த பின் தான் இந்த மாற்றங்கள் எம் வாழ்வில் ” என்று ஆரம்பிக்கிறது.
நான் சிரிக்கிறேன். வார்த்தைகளை திருத்துகிறேன்.
” இயற்கை உங்களை அனுப்பிய பின், நான் என்னை புரிந்து கொண்டதால் இந்த மாற்றங்கள் எம் வாழ்வில் “.
” இல்லை இல்லை .. உங்களால் தான் … ” என்று மீண்டும் ஆரம்பிக்க …. சிரித்து கடந்தேன்.
சில மாதங்களுக்கு பின் .. மீண்டும் அதே வரிகள் “உங்களால் தான் .. ஆனால் இந்த முறை Blaming mode ல் “. நான் சிரித்து கொண்டே சொன்னேன் …
” உங்களிடம் இருந்து இந்த ” உங்களால் தான் ” வார்த்தை எப்போது வெளியேறுகிறதோ அப்போதுதான் மற்றவர் பேசுவது உங்களின் காதில் விழும் ”
அந்த ஆளுமை கேட்பதாக இல்லை. அமைதியாக சிரித்து கடந்தாயிற்று. மீண்டும் சில மாதங்களுக்கு பின் ” Sorry ” என்று ஒரு வரியுடன் பேச்சை ஆரம்பிக்க நான் இப்போதும் சிரித்து சொன்னேன் ..
” ” உங்களால் தான் ” வெளியேறி இருக்கிறது போல ! ”
அந்த ஆளுமை அமைதியாக இருந்தது.
💐💐💐
மனிதர்கள் அப்படித்தான். மாற்றம் அவர்களின் குணம். அதை கண்டு நாம் உடனுக்குடன் மாறுவதை விட .. ” இது இப்படித்தான் ” என்று வாழ முயற்சித்தால் சிரித்து கடக்கலாம்.
💐💐💐
ஓர் சிறு குறிப்பு ; இந்த மேற்சொன்ன மூன்று உதாரணங்களில் முதலாம் மற்றும் மூன்றாம் உதாரணங்கள் – பெண் ஆளுமைகள்.
இரண்டாம் உதாரணம் – ஆண் ஆளுமை.
இங்கே தான் கண் எதிரே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதை படித்தால் ” நாம் தான் ” என்று அவர்களுக்கு புரியும். ஆனாலும் ஒன்றும் நடக்காதது போல சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அது தான் மனிதர்கள்.
💐💐💐
பயணிப்போம்.