நான் எனப்படும் நான் : 052
#WhoisJay ; 027
Corporate Training – கிற்கு, Coated, Suited, Booted Trainer ஆக நான் செல்கிறேன் என்றா நினைக்கிறீர்கள் ?. இல்லை. இல்லவே இல்லை. ( ஒரு காலத்தில் சென்றதை நினைத்தால் இன்னமும் சிரிப்பாக இருக்கிறது ! ). மிக சாதாரணமாக செல்லும் என்னை சில நிறுவனங்களின் Top Heads – ” Trainer எங்கே ? ” என்று கேட்டதுண்டு. ( அறியாமை, கிண்டல், Superiority .. என்று அதில் என்ன வேண்டுமானாலும் காரணங்களாக இருக்கலாம் ! ). ஆனால் பயிற்சி வகுப்பு முடியும்போது .. ” தோற்றம் முக்கியம் அல்ல. தோற்றத்திற்குள் இருக்கும் மனிதன் தான் முக்கியம் ” என்கிற பாடத்துடன் அவர்கள் வெளியே செல்வதை ஒருவித மகிழ்வுடன் நான் பார்ப்பதுண்டு. அங்கே இருக்கிறது அவர்களின், நிறுவனங்களின் மற்றும் எம் வெற்றி !
💐💐💐
ஒரு பெரும் நிறுவனம் அது. வந்த வாடிக்கையாளரை அது கண்டுகொள்ளவே இல்லை. காரணம் – அவரின் தோற்றம். அதே வாடிக்கையாளர், அந்த நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் பொருளை வாங்க போகிறார் என்று தெரிந்ததும், சுதாரித்து, உடனே அவரை அழகாக Treat செய்ய ஆரம்பித்தது. அவர் சிரித்து கொண்டே சொன்னார் – ” பணம் இருந்தால் தான் மரியாதை ” என்ற எண்ணம் இருக்கும்வரை நீங்கள் சொல்லும் Service ஐ நான் நம்ப போவதில்லை. வேறு நிறுவனத்தில் இதே பொருளை நான் வாங்கிக்கொள்கிறேன் ” – சிரித்து கொண்டே அவர் வெளியேறிவிட்டார். அவர் வாங்க வந்த பொருளின் விலை 25 இலட்சத்திற்கு மேல் !
ஆம். ” இன்னார் இன்னார் இந்த பொருளை தான் வாங்குவார்கள் ” என்று நினைப்பதை விட ஒரு தீண்டாமை வியாபாரத்தில் இருக்க முடியுமா ?
💐💐💐
Coated, Suited, Booted – Top Level CEO – ஒருவர் ஒரு முறை என்னை பார்த்து கிண்டலாக சொன்னார் –
” You Know .. You have to Dress accordingly ! ” .
நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.
” என்ன நடக்கும் இல்லை என்றால் ? ”
கொஞ்சம் சுதாரித்த அவர், ” No what I meant is … ” என்று தடுமாறினார்.
அங்கே இருக்கிறது அந்த போலித்தனத்தின் நுழைவாயில். நான் அதை அங்கேயே அடித்து விளையாடுவதுண்டு. ஒருமுறை Mark Twain ஐ, அவரின் உடையை பார்த்து, பெரிய விழா ஒன்றின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தவுடன் … உடனே சென்று அவர் ஒரு Coated Suited, Booted உடையுடன் உள்ளே வந்தார். அனுமதி கிடைத்தவுடன் வாசலை கடந்து சென்று, உடனே அனைத்து உடைகளையும் கழட்டி …
” இதற்கு எல்லோரும் மரியாதை செய்யுங்கள் ” என்று ஆணவமாக சொல்லி …
அவர்களின் தவறை சிரித்து உணர்த்தியதாக படித்தது இன்னமும் நினைவில் !
💐💐💐
” ஆள் பாதி, ஆடை பாதி ” என்பது யாரோ ஆடையை விற்க ஏற்படுத்தி இருக்கும் ஒரு வரி செய்தி. என்னை பொறுத்தவரை “ஆள்” தான் எல்லாம். ஆடை ஒரு Extra மனநிலை. அவ்வளவே. ” உன் ஆடை நன்றாக இருந்தால் நான் உன்னிடம் நன்றாக பேசுவேன் ” என்பதை போன்ற Corporate தீண்டாமை இந்த உலகில் இல்லை !
💐💐💐
Corporate நிறுவனங்களின் House- Keeping, Security மனிதர்களை அந்த நிறுவனங்கள் என்னவாக நடத்துகின்றன என்று கவனிப்பதில் தெரியும் – அந்த நிறுவனங்களின் மனித அலட்சிய முகங்கள் ! ஓரு நிறுவனம் பற்றிய என் முதல் கேள்விகளில் ஒன்று –
” உங்களின் Toilet ஐ Clean செய்யும் தொழிலாளியின் பிறந்த நாள் என்ன ? கடைசியாக அவரின் பிறந்த நாளை எப்போது நீங்கள் Celebrate செய்தீர்கள் ? ”
அப்போது திருதிருவென்று முழிக்கும் CEO க்கள் – மறக்கும் ஒரு விடயம் – அல்லது நினைக்க ஆரம்பிக்கும் ஒரு விடயம் –
அந்த தொழிலாளியும் இந்த நிறுவன வளர்ச்சியின் முக்கிய பங்குதாரர் என்பது !
( இரண்டு நாள் அவர் வரவில்லை என்றால் தெரியும் – நாற்றம் ! )
💐💐💐
உடை தான் முக்கியம் என்றால் – நான் முதலில் சொல்லும் Bye அந்த நிறுவனங்களுக்கு, மனிதர்களுக்கு, குடும்பங்களுக்கு, சமுதாயத்திற்கு … ! இரத்தமும் சதையுமாக உள்ளே இருக்கும் மனிதத்தை கவனிக்காது, வெளியே தொங்கும் உடைக்கு மரியாதை செய்யும் ஒரு சமூகத்தில் எனக்கு எந்த அடையாள அட்டையும் வேண்டியதில்லை ! அங்கே நான் ” இல்லாத, வாழாத, பிறக்காத மனிதனாகவே ” மரிக்க விரும்புகிறேன்.
💐💐💐