நான் எனப்படும் நான் : 053
#WhoisJay ; 028
” நியாயம் இருந்து எதிர்த்து வரியா ….
உன்னை மதிப்பேன் அது எம் பழக்கம் ! ”
சமீப பாடல் வரிகளில் எனக்குள் உழலும் வரி இது. பின்னே ? நல்ல நட்பாகினும், நியாயம் இல்லை எனில் .. மதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது சரி .. யார் பக்க நியாயம் ?
1. எதிர்ப்பக்க நியாயம்
2. தன் பக்க நியாயம்
3. பொது நியாயம்
4. மனசாட்சிக்கான நியாயம் ( இது வெளியே தெரியாது. தெரிய வாய்ப்பில்லை. தேவையுமில்லை ! )
💐💐💐
1. நியாயம் ;
அவர் சொல்வது சரியாக இருக்க கூடும் என்று கவனிப்பது. தன் பக்க நியாயங்களை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு, Zero State Mind இல் இருந்து எதிர்ப்பக்க நியாயத்தை யோசிப்பது. இன்னும் கூட தெளிவாக சொல்லமுடியும். எதிர்ப்பக்க நியாயத்தை இன்னும் யோசிக்கும் முன் அது எப்படி எதிர்ப்பக்கம் ஆகும் ? ஆகவே இதை நான் இன்னொரு பக்க நியாயம் என்றே சொல்வேன் !
2. தன் பக்க நியாயம் ;
Non Judgemental state இல் இருந்து தன்னை சொல்வது. ஆம். தனக்கு தானே வழக்குரைஞர் ஆவது அல்ல தன் பக்க நியாயம் ! தன் பக்க நியாயம் என்பது தன் பக்கத்தை எடுத்து உரைப்பது ! அவ்வளவே.
3. பொது நியாயம் ;
சமூகம் சார் வாழ்வில் இந்த நியாயம் முக்கியமானது. Moral Binding இல் கட்டுக்குள் வரும் இதன் நியாயப்பார்வை மனிதனை மனிதனாக்கும். இல்லை எனில் மிருகமாவான். !
4. மனசாட்சிக்கான நியாயம் ;
யாருக்கும் தெரியாத, தெரிய வேண்டிய அவசியம் அற்ற நியாயம் இது. ஊருக்கே கெட்டவன் / வள் இங்கே நல்லவனாக தெரிய அவனுக்குள் / அவளுக்குள் .. ஓர் நியாயம் இருக்கும். இது மேற்சொன்ன மூன்று நியாயங்களையும் அடித்து நொறுக்க கூடியது. அதனால் தான் சில மனிதர்களை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை !
💐💐💐
இவ்வளவையும் கடந்து ஒருவரிடம் நான் இனிமையாக பேசமுடியும் எனில் … அவரின் அவளின் உறவை நான் மதிக்கிறேன் என்று அர்த்தம். எதிர்க்க முடியாமலோ அல்லது தெரியாமலோ இல்லை !
💐💐💐
மீண்டும் சொல்கிறேன் …
” நியாயம் இருந்து எதிர்த்து வரியா ….
உன்னை மதிப்பேன் அது எம் பழக்கம் ! ”
💐💐💐