நான் எனப்படும் நான் : 054
#WhoisJay : 029
மற்றவர்களின் நிறைவில் மனம் நிறையும் நான், என் நிறைவை பற்றி யோசித்தது இல்லை. ( மற்றவர்களின் நிறைந்த முகத்தை பார்ப்பதிலேயே நிறைவைடைந்து வாழ்ந்து விட்டேனோ என்னவோ ! )
💐💐💐
நிறைவு அப்படி என்னதான் செய்யும் ?
💐 சட்டென ஓர் அமைதி வெளிக்கு நம்மை இழுத்து செல்லும்.
💐 எதையும் யோசிக்க வேண்டாம் என்று ஆழ் மனம் சொல்லும் கட்டளையை ஏற்கும்
💐 ஆள் அரவம் அற்ற ஒரு பூங்காவின், தனி நாற்காலியில் …தன்னந்தனியாக அமர சொல்லும். ( அப்படி அமர்ந்து எழுதிய ஒன்றே இது ! )
💐 வெளி உலக சத்தம் காணாமல் போகும்
💐 ” வேறெதுவும் வேண்டாம் ” என்று சிரித்து சொல்லும்.
💐 எடுக்கும் Selfi யில் அதே முகம், திடீரென்று…. பளிச்சென்று, கண்கள் மின்ன, Frozen Smile உடன், நிதான கன்னங்களுடன் சிரிக்கும்.
💐 கண்ணாடி ஜன்னல் வழியே …. நகரும் வாகனங்களை பார்த்து சிரிக்க சொல்லும்.
💐 அறையின் அமைதியை அப்படியே உண்ண சொல்லும்
💐 ” நீருக்குள் பூக்கும்
பூக்களின் சத்தத்தை
கேட்காமல் உணரும் ! ”
என்று கவிதை எழுத தயாராகும்.
💐 மனம் பிடித்தவர்களுக்கு, மன அலைவரிசையில் … மன மொழி மூலம் ” மௌனத்தை ” பரிசாக அனுப்பும்.
💐💐💐
வாழ்க்கையில் சில நாட்கள் நமக்கே நமக்கு என்று இப்படி அமைவதுண்டு. இவை தேடி அமைவதில்லை. தேடாமல் .. போகிற போக்கில் நமக்குள் நுழைந்து, வெளியே செல்ல மறுப்பவை – காலம் முழுக்க !
💐💐💐
ஆம். #நிறைகிறேன் .
என்ன காரணம் தெரிய வேண்டுமா ?
காரணம் சொன்னால் அது நிறைவு அல்ல. பகிர்வு ! ஆம். பகிறப்பட்ட காரணங்கள் நிறைவை தருவதில்லை.
நமக்குள் புதைந்த அழகான தருணங்கள் தாம் நிறைவை கொடுக்கின்றன – காலம் முழுவதும் !
💐💐💐