நான் எனப்படும் நான் : 057
#WhoisJay ; 032
Influence – என்று ஒரு வார்த்தை இருக்கிறது. சரி .. இதன் அர்த்தம் என்ன ? கவனிப்போம். Dictionary யில் நேரடியாக ” The Capacity to have an Effect on …. ” என்று வருகிறது. On…. ? அப்படி என்று கேட்டால் .. On Anything என்பதே பதில் !
” உங்களை கவனிக்கிறேன் ஜெய். 10K, தீரா உலா, Photographs, Training … எல்லாவற்றின் மூலம் ஏதோ ஒன்றை யோசிக்க வைக்கிறீர்கள். இப்போது 10K நடக்க ஆரம்பித்திருக்கிறேன் ” என்று சமீபத்தில் செய்தி அனுப்பிய நட்புக்கு நன்றிகள். இது அவரிடம் நான் ஏற்படுத்திய influence என்று சொல்லலாம்.
” சார் .. சொன்னபடி Cigarette நிறுத்தி இரண்டு வருடம் ஆகிவிட்டது. நான் எடுத்த முடிவுகளில் மிகச்சிறந்த முடிவு இது. உங்களது பயிற்சிக்கு நன்றி ! ” Influence க்கு இது இன்னொரு Sample.
சரி. எனக்கு எதுவெல்லாம் / யாரெல்லாம் influence ?. கவனிப்போம்.
1. புத்தகங்கள் ;
யாரோ இங்கே எழுதி இருந்தார்கள். ” புத்தகங்களை படிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நம்முடைய அனுபவங்கள் வேறு. புத்தக அனுபவங்கள் வேறு ” என்று. எனக்கு சிரிப்பு வந்தது. கண்டிப்பாக மேலோட்டமாக புத்தக அனுபவங்களை பற்றி எழுதியது சரி என்றாலும் ( ஏட்டு சுரைக்காய் … ), புத்தகம் என்பது ஒரு அனுபவ குவியல் தான். ஆனால் அதற்கு பின் இருக்கும் Patterns ஐ study செய்வதில் / அவற்றை பயன்படுத்துவதில் / மீண்டும் புத்தகம் படித்து அவை எங்கே Relate ஆகிறது என்று புரிவதில் தான் இருக்கிறது – புத்தகத்தின் உயிர் ! ஒரு முறை புத்தகம் படித்தவர்களுக்கு ஏதோ புரியும். ஒரே புத்தகத்தை பல முறை படிப்பவர்களுக்கு நான் சொல்வது புரியக்கூடும். நுனிப்புல் மேய்பவன் வேர் பற்றி பேச தகுதி அற்றவன்!
2. யாரோ மனிதர்கள் ;
என்னை கடக்கும் யாரோ மனிதர்களின் ஒரு செயல், ஒரு வார்த்தை, ஒரு வரி, ஒரு தீர்வு, ஒரு இயல்பு எனக்கான பெரும் Influence. Recent ஆக சந்தித்த ஒரு தேநீர் கடைக்காரர் சொன்ன வரி – ” வியாபாரம் குறைந்தால் முதல் கேள்வி எனக்குள் தான் – எங்கே தவறு செஞ்சேன் னு கேட்டுக்குவேன். பக்கத்து கடை எதிர்த்த கடை புதுசா வந்த கடை என்றெல்லாம் யோசிக்க மாட்டேன். நான் எங்க தப்பு பண்ணேன் னு மட்டும் தான் யோசிப்பேன் ! ”
எவ்வளவு பெரிய Influence இது !
3. கடின சூழ்நிலைகள் ;
நான்கு முறை விபத்தை சந்தித்து இருக்கிறேன். தனி வாழ்வில் எதிர்பாரா இரு பெரும் Negative நிகழ்வுகள். நட்பு வட்டார துரோக / நம்பிக்கை இழக்கும் நிகழ்வுகள். வியாபார வட்டத்தில் சொன்ன வாக்கை காப்பாற்றா மனிதர்கள் / அனைத்தையும் சிரித்தே கடக்கிறேன். இவை அனைத்தும் நடந்த விதம் Negative என்று சொன்னாலும், எனக்கு Positive influence ஐ ஏற்படுத்திய நிகழ்வுகள் !
4. Diet Influence ;
எம் வாழ்வின் பெரும் மாற்றமாக இதை நான் யோசிப்பேன். சொல்லுவேன். Kirthika Tharan க்கு நன்றிகள். உடலை Healthy ஆக வைக்க முடியும் என்பது இப்போது வசப்பட்டு இருக்கிறது. இதன் Influence வருகிற காலங்களில் தெரியும் !
💐💐💐
இந்த Influence எல்லாவற்றையும் கடந்து ஆங்காங்கே அத்தி பூத்தாற்போல தலைவர்கள் influence செய்வதும். ஆம். இப்போது இருக்கும் தலைவர்கள் Hyped ஆக இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. ” இது நான் இல்லை ” என்றே இப்போதைய தலைவர்கள் பிதற்றுகிறார்கள். ” இதுதான் நான் “என்று சொல்லும் தையிரியம் அவர்களுக்கு இல்லை !
💐💐💐
நீங்கள் ஏற்படுத்தி இருக்கும் Influence என்று எதை உங்களால் சொல்ல முடியும் ?
பயணிப்போம்.