நான் எனப்படும் நான் : 061
#WhoisJay ; 036
#நான்குபுகைப்படங்களநான்குமனநிலைகள் ;
💐💐💐
முதல் புகைப்படம் ;
என் வாழ்வின் Supreme State என்று சொல்லப்படக் கூடிய நிலையில் இருந்த போது எடுத்தது. Fit / Healthy / Busiest / Self Fulfilling / என்று அவற்றை வகைப்படுத்தலாம். இங்கே எனக்கு என்று யாரும் தேவைப்படவில்லை. வாழ்க்கை அதன் போக்கிலும், நான் என் இலக்கின் போக்கிலும் செயல்பட்டு வந்த நேரம் அது.
இரண்டாம் புகைப்படம் ;
என் மகிழ்வில் உச்சமென்று இந்த தருணங்களை சொல்வேன். Prime Fitness & Family Happiness கலந்த முகம் என்றால் இதுதான் என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். தங்கையின் முதல் பெண் குழந்தை என் வாழ்வில் குழந்தை தருணங்களை உணர வைத்த கணங்கள் அவை. பெரு மகிழ்வை முகத்தில் காணமுடியும்.
மூன்றாம் புகைப்படம் ;
Challenging State of Life என்று சொல்லலாம். துரோகம், எதிர்பாரா நிகழ்வுகள், முன் ஒன்று பின் ஒன்று என்று வேடமிட்ட நட்புக்கள், அதிர்ச்சிகளை பக்குவம் அணைக்க ஆரம்பித்த காலகட்டத்தில் – உணவு பற்றிய Consciousness எல்லாம் என்னை விட்டு விலகி இருந்தது. 5 வருடங்களில் அப்படி ஒரு மாற்றம் ! நான் தானா இது என்று என்னையே நான் கேட்க வேண்டி இருந்தது. XXL எல்லாம் சாதாரணமாக மாறிப்போன ஒரு வாழ்வியலில், தேடித்தேடி உணவு உண்டதை தவிர மகிழ்வென்று ஒன்று இல்லை என்றே தோன்றியது !
நான்காம் படம் ;
வாழ்க்கையின் Rep. ” போடா .. பார்த்துக்கலாம் ” முதிர்ச்சி. ” என்னால் முடிந்த நல்லதை செய்து விட்டு bye சொல்வோம் ” என்று எனக்குள் முடிவு செய்த தருணங்கள் இங்கே அதிகம். வாழ்க்கை இங்கே எளிதாக அமைவதை உணர்கிறேன். எதிர்பார்ப்பில்லை என்னும்போது கிடைப்பது எல்லாம் அட்டகாசமான மகிழ்வு என்னும் வாழ்க்கை முறை. யாருக்கும் கேள்வியும் பதிலும் சொல்ல கேட்க வேண்டியது இல்லை என்கிற … யதார்த்த தொனி. அவர்களுக்கு தெரியாதா ? என்று கடந்து செல்லும் சிரிப்பு. தெரிந்ததை செய்கிறேன் / தவறென்றால் திருத்தி கொண்டு செய்கிறேன் என்பதை தவிர .. வேறு பெரிய Logic எல்லாம் இப்போது இல்லை என்பதால் மனிதர்களை சிரித்து கடக்க முடிகிறது.
💐💐💐
நம் முகங்கள் நம் வாழ்வின் Rep. உங்களின் நான்கு வகை முகங்களை நல்ல வருட இடைவெளியில் எடுத்து பார்த்தால் …என்ன இழந்தீர்கள் / என்ன பெற்றீர்கள் என்பது புரியவரும். என்ன ? உங்களின் புகைப்படங்களை பார்க்க தயாரா ?
💐💐💐