நான் எனப்படும் நான் : 063
#WhoisJay ; 038
நீங்கள் Massage ( மசாஜ் ) Center க்கு கடைசியாய் எப்போது சென்றீர்கள் ? ஏன் செல்லக்கூடாது ?
💐💐💐
பொதுவாக 300 Plus days ஓடிக்கொண்டே இருக்கும் என் Schedules இல் இந்த உடல் எனக்காக இங்கும் அங்குமாக அலைந்து கொண்டே இருக்கும். அந்த உடலை Healthy யாக வைத்துக்கொள்வது என்பதில் ஒரு பக்கம் நான் மிக கவனமாக இருப்பது போல அதை Relax செய்வதையும் ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன்.
Massage என்பது பொதுவாகவே ஒரு High Class மனித வாழ்வியல் என்றே பார்க்கப்படுகிறது ! கண்டிப்பாக இல்லை. நீங்கள் தினமும் 3 / 4 / 5 சிகரெட் புகைப்பவரா ? மாதம் இரு முறை Alcohol ? மாதம் ஒரு முறை Mall இல் சினிமா பார்ப்பவரா ? உணவகங்களில் மாதம் 5 முறையாவது உணவு உண்பவரா ? தினமும் 5 Coffee வெளியே குடிப்பவரா ?
இதில் ஏதாவது ஒன்றை குறைத்தால், ( உடலுக்கும் நல்லது தானே ? ) Massage ஒன்றும் முடியாத விஷயம் இல்லை.
சரி .. ஏன் Massage செய்ய வேண்டும் ?
மாதத்தில் ஒரு முறையாவது, ஒரு 1.5 மணி நேர அளவிற்கு, ஏன் உடல் தன்னை தானே Relax செய்துகொள்ள கூடாது ? ஆம். உடலே உடலை Relax செய்யும் வித்தை தான் Massage. விரல்களின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தங்களில் தசைகளுக்கு இடையே உருவாகும் சிறு வெப்பம் கொடுக்கும் .. ஆழ் ஒத்தடம் தான் Massage.
💐💐💐
💐 நிர்வாணம் உடலுக்கு மிக நல்லது. ஆடை உடலுக்கான ஒன்று அல்ல. அது நாகரிகம் கருதி வந்த வெளிப் பழக்கம். நிர்வாணம் தான் உடலின் யதார்த்த ஆடை. அந்த நிர்வாணத்தை உடல் உணரும்போது அது எந்த வித நடிப்புமில்லாமல் ” ஷப்பாடா ” என்று இருக்கிறது. ( பின்னே உடை அணிந்தவுடன் நாம் உடலை தான் கடினப்படுத்துகிறோம் ! நிற்பது அமர்வது நடப்பது எல்லாவற்றிலும் உடை சார்ந்து தானே உடலை வருத்துகிறோம் ? ). நிர்வாணம் Massage இல் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒட்டு துணி தவிர்த்து உடல் இளைப்பாறும் அக்கணம் மிக தேவையான ஒன்று.
💐 நெற்றியில் துளி துளியாய் இடப்படும் எண்ணெய் .. ஏதோ ஒன்றை எங்கோ சாந்தப்படுத்துகிறது. தினசரி Tension எல்லாம் மறைந்து, ஏதோ ஒரு புள்ளியில் நாம் கலக்கும் அந்தக் கணம் பெரும் வரம். Alcohol நோக்கி பயணித்து, மறுநாள் காலையில் தலையை பிடித்துக்கொண்டு தலைவலி என்று அலைவதை விட … அந்த நெற்றியை கொஞ்சம் ஆறப் போடுவது சாலச் சிறந்தது !
💐 உடல் முழுக்க எண்ணெய் மூலம் கொடுக்கப்படும் அழுத்தத்தில் எங்கே வலி வருகிறதோ அங்கே தசை இலேசாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அந்த இடத்தை இடம் வலம் மேல் கீழ் என்றெல்லாம் இழுத்து, அழுத்தி சரி செய்யும் அளவு தான் Massage Expert ன் இரகசியம். எனக்கு இன்று மேல் கையில், இடது மார்பில், பின் முதுகில் … எல்லாம் இந்த வகை Massage செய்து அந்த இடத்தை Relax செய்தது புரிந்தது.
💐 Massage முடிந்தவுடன் ஒரு சுடு நீராவிக் குளியல். மொத்தமாய் வியர்த்து வழிந்து, பின் மித நீரில் குளித்து .. வெளியே வந்தால் … ” ” அப்படி இருக்கிறது. ஆம். சொல்ல முடியாத, விவரிக்க முடியாத, எழுத முடியாத உணர்வு அது ! ( அம்மா அப்பா வை ஒருமுறை அழைத்து வர வேண்டும் என்று இன்று தோன்றியது )
💐 இந்தியா முழுக்க Massage செய்திருக்கிறேன். ஆண் பெண் இருவரும் செய்திருக்கிறார்கள். ( கேவல எண்ணங்களுக்கு நான் பொறுப்பல்ல ! ). என் உடலை மீண்டும் அழகாக மீட்டு கொடுத்திருக்கிறார்கள். இந்தூரில் எனக்கு Massage செய்த அஸ்ஸாம் மாநில ஆண், மும்பையில் Massage செய்த மிசோரம் மாநில பெண், நாகர்கோவிலில் Massage செய்த கேரள ஆண் … இவர்கள் எல்லாம் மிகச்சிறந்த Massaeurs ! இவர்கள் அனைவரும் உடலில் அழுத்தம் இருப்பதே தெரியாமல் என் உடலை மீண்டும் என்னிடம் Fresh ஆக ஒப்படைத்தவர்கள் !
💐 Massage பற்றிய கேவலமான பார்வை ஒன்று இருக்கிறது. ஆனால் .. என்னை பொறுத்தவரை அப்படி இல்லை. ( எங்காவது Massage என்கிற பெயரில் ஏதாவது இருக்கலாம் ! ). என்னை பொறுத்தவரை அது ஒரு உன்னத தொழில். நம் உடலை நம் பெற்றோர், மருத்துவர், குடும்பம் தவிர்த்து பார்க்கக்கூடிய வாய்ப்பை பெற்ற ஒரே தொழில் இது !
💐 என்னால் அப்படி எல்லாம் செல்ல முடியாது … என்ன செய்வது ? என்று கேட்கிறீர்களா ?. ஒன்றும் தவறில்லை. உங்களின் குழந்தைகளை அணைத்து கொண்டு நன்றாக தூங்குங்கள். அதுதான் இயற்கையின் Best Massage !
💐💐💐
நீங்கள் Massage center க்கு கடைசியாய் எப்போது சென்றீர்கள் ? ஏன் செல்லக்கூடாது ?
💐💐💐