படம் சொல்லும் பாடம் – 015
படம் சொல்லும் பாடம் – 015
#MyMoviesList : 001
Section 375 ;
HINDI
💐💐💐
இந்திய நீதி மன்றங்களில் நீதி கிடைத்தால் சந்தோஷம். ஆனால் பெரும்பாலும் நிதிக்கு தான் நீதி என்று சொல்லப்பட்டாலும், இந்தப் படம் …அதையும் தாண்டி இருக்கும் ஓட்டை உடைசல்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுக்கிறது. ஒரே ஒரு தவறை காவல்துறை அல்லது தடய அறிவியல் நிபுணர் செய்யும் பட்சத்தில் குற்றவாளி தப்பிக்க கூடும். அல்லது அந்த தப்பு பெரும் விலையாக பேசப்படும் !
அக்க்ஷய் கண்ணாவா இது ? கரீனா கபூருடன் ஆட்டம் போட்ட அந்த Hero வா ? நம்பவே முடியவில்லை. என்ன ஒரு தீர்க்கமான பார்வை ? உடல் மொழி ? வார்த்தை உச்சரிப்பு ? அசத்தல். ” நாம் நீதிக்காக இங்கே இல்லை. சட்டத்திற்க்காக மட்டுமே ” என்று முதலில் சொல்லும் வார்த்தை வில்லத்தனமாக தெரிந்தாலும் .. படத்தின் முடிவில் அதே வார்த்தையின் பொருள் விளங்கும்போது … பேரமைதி !
ஒரு பெண் ஆடை வடிமைப்பு நிபுணர். ஒரு இயக்குனர். கற்பழித்து விட்டார் கதை. இவ்வளவு தான். ஆனால் படம் நம்மை கட்டிப்போடுகிறது. ஒவ்வொரு நீதிமன்ற அசைவும், பேச்சும், தொனியும் .. கேள்விகளும் … சட்டம் எவ்வளவு பெரிய ஓட்டைகளை தன்னுள்ளே வைத்துக்கொண்டு சிரிக்கிறது என்பது நமக்கு புரியும். இவ்வளவுக்கும் இடையில் தான் நாம் நீதி பெறுவது …பெரும் ஆச்சர்யம் தான் !
நம் இந்திய நீதிமன்ற அமைப்பில் தண்டனையை நீதிமன்றம் வழங்குவது இருக்கட்டும். அதற்கு முன்னரே .. பொது இடம், சமூக வலைதளம், குடும்ப உறுப்பினர்கள், மனைவி, குழந்தைகள் …. இங்கே முதலிலேயே தண்டனை வழங்கப்பட்டு விடுகின்றது. இதற்கு பின்னர் பல வருடங்களுக்கு பின் தான் குற்றவாளி தண்டனை பெறுகிறான். அநேகமாக குற்றவாளி தண்டனை பெறுவதற்குள் அவனின் மனம் ” இனிமேல் என்ன தண்டனையாக இருந்தால் என்ன ? ” என்ற கேள்வியுடன் வாழ்கிறது.
படத்தின் முடிவில் நமக்கு சில அதிர்வுகள் வரும் என்றால், படத்தின் இடை இடையே … கேள்விகளால் சாட்சிகள் துளைக்கப்படும் போது மனம் ” நீதி நீதி ” என்று கதறும். ஆம். கண்முன்னே சாட்சிகளின் வார்த்தைகளே தண்டனையை தீர்மானிக்கும் என்பது தெரிய வரும்போது ” சரியா பேசணுமே ” என்று தோன்றுவது தான் படத்தின் வெற்றி.
ஒரு மூன்று மணி நேர தனிமையை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு பிடித்த கொரிக்கும் உணவுகளை வைத்துக்கொண்டு, mobile ஐ Switch off செய்து விட்டு பார்த்தால் … அட்டகாசமான ஒரு படம் பார்த்த உணர்வு மிஞ்சும்.
இந்த படத்தின் மொத்த குழுவிற்கும் எம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
💐💐💐





